சனி, 24 அக்டோபர், 2020

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 24,
 வரலாற்றில் இன்று.

மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று. 
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

 ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

 இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர்.

 இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது.

1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு.

 இவர்களோடு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று. ஐக்கிய நாடுகள் தினம் இன்று.

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.

 ஐக்கிய நாடுகள் தினம் இன்று.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ஆம்தேதி ஐக்கிய நாடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம ்தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

2ஆம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலக தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.

1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும்.

ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும்.

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.உலக தகவல் வளர்ச்சி தினம் இன்று.

அக்டோபர் 24,
 வரலாற்றில் இன்று.

உலக தகவல் வளர்ச்சி தினம் இன்று.

உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை உலக தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவு செய்தது. எனவே 1972ஆம் ஆண்டில் உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24ஆம் தேதியை ஐ.நா.சபை அறிவித்தது.

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.உலக போலியோ ஒழிப்பு தினம் இன்று.

அக்டோபர் 24, வரலாற்றில் இன்று.

உலக போலியோ ஒழிப்பு தினம் இன்று.

போலியோ நோயை பூமியிலிருந்து வேறோடு ஒழிக்க சபதம் ஏற்போம் !!!
போலியோ நோய்க்கிருமிகள் மிக வேகமாக தொற்றும் தன்மையுடையவை. 

இது நரம்புமண்டலத்தை பாதித்த சில மணி நேரத்தில், பக்கவாதத்தை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நுண்கிருமி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே பாதிக்கும்.

போலியோ நுண்கிருமிகள் மலம் கலந்த தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் மூலமாக பரவுகின்றன. இந்த கிருமியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கை கால்கள் அல்லது உடலின் பிற பகுதிகளில் நிரந்தர ஊனத்தை ஏற்படுத்துகிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும்.

இந்நோய் வந்தால் அதனை குணப்படுத்த எந்த ஒரு சிகிச்சையும் கிடையாது. இதற்கு ஒரே வழி குறிப்பிட்ட இடைவெளி காலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சமயத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதேயாகும். அவ்வாறு கொடுக்கும்போது போலியோ நோய் எதிர்ப்பு திறன் அனைத்து குழந்தைகளுக்கும் உருவாக்கப்படுகிறது.

வெள்ளி, 23 அக்டோபர், 2020

DEE Proceedings - 10.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் விபரம் கோருதல்- தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் நாள்:23.10.2020

DEE Proceedings - 10.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் விபரம் கோருதல்- தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் நாள்:23.10.2020
Proceedings ஐ படிக்க இங்கே கிளிக் செய்க...

வியாழன், 22 அக்டோபர், 2020

அனைத்து வகை ஆசிரியர்கள் -09.03.2020 க்கு முன்னர் உயர் கல்வித்தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதியம் பெறாதவர்கள்- விவரங்கள் கோருதல்-திருத்தம் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 22.10.2020..

அனைத்து வகை ஆசிரியர்கள் -09.03.2020 க்கு முன்னர் உயர் கல்வித்தகுதி பெற்றவர்கள் - ஊக்க ஊதியம் பெறாதவர்கள்- விவரங்கள் கோருதல்-திருத்தம் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 22.10.2020..

*🌟பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் விடுபட்ட விபரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் அனைத்து பணவரவு அலுவலர்களுக்கு கடிதம்..*

*🌟பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் விடுபட்ட விபரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக  நாமக்கல்  மாவட்ட கருவூல அலுவலர் அனைத்து பணவரவு அலுவலர்களுக்கு கடிதம்..*

இராசிபுரம் வட்டாரக் கல்வி அலுவலரின் பொறுப்பற்ற, கடமை தவறிய செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டனம் தெரிவிக்கிறது..இராசிபுரம் ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை ஆசிரியர் மன்றம் வலியுறுத்துதல் தொடர்பான கடிதம்.

இராசிபுரம் வட்டாரக் கல்வி அலுவலரின் பொறுப்பற்ற, கடமை தவறிய செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டனம் தெரிவிக்கிறது..
இராசிபுரம் ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காண 
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை
 ஆசிரியர் மன்றம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலரின் பொறுப்பின் கடமை தவறிய , முறையற்ற ,சுயலாபம் நிறைந்த, குழுவாதப் போக்குடைய முறையற்றச் செயல்பாடுகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் புகாராக கல்வித்துறை உயர் அலுவலர்களிடம் பதிவு செய்தல் தொடர்பாக...

அன்பானவர்களே! வணக்கம்!
இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலரின் பொறுப்பின் கடமை தவறிய , முறையற்ற ,
சுயலாபம் நிறைந்த, குழுவாதப் போக்குடைய முறையற்றச் செயல்பாடுகளை கடந்தாண்டே (2019) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் புகாராக கல்வித்துறை உயர் அலுவலர்களிடம் பதிவு செய்தது.
இதன் பின்னர் தலைமைஆசிரியர் கூட்டம் நடத்தி ஆசிரியர்மன்றத்திற்கு  எதிராக சிலரை தூண்டி விட்டு குளிர்காய்ந்துக்கொண்டு , ஆசிரியர் மன்றத்தின் மீது சில அல்லக்கைகளின் துணையை வைத்துக்கொண்டு அவதூறுகளை அள்ளி வீசிப்பார்த்தார்.
ஆனாலும் இவைகள் எதுவும் எடுபடாத நிலையில்,வேறு வழியின்றி மேற்கண்ட அலுவலர் மிகுந்த வீறாப்புடன் தானே (அலுவலக நிர்வாகமே) வருமானவரித் தொகையை இடிடீஎச் (E-TDS) செய்து விடுவதாக உறுதி கூறினார். அப்போதைக்கு இப்பிரச்னையை இத்தகு உறுதிமொழி கூறி முடித்துக்கொண்டார்.
மேற்கண்ட அலுவலர் இந்த உறுதிமொழியை இன்றையவரையிலும் (19.10.2020)வரையிலும் காப்பாற்றிட வில்லை என்றே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்துஉள்ளது.
இப்புகாரின் அடிப்படையில் இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலரை அலைபேசியில் அழைத்து ஒருவாரக் காலத்திற்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணுமாறு நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரை வழங்கி உள்ளார்கள்.
நாமக்கல் மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரையை அடுத்து தன்னை பாதுக்காத்துக்கொள்ளும் வகையிலும், தனது சில அல்லக்கைகளை காப்பாற்றிடும் நிலையிலும் தானே (அலுவலக நிர்வாகமே) படிவம் 16 பெற்றுத்தருவதாக புலனக்குழுவில் தகவல் பதிவு செய்து உள்ளார்.
தற்காலிகமாக , இப்போதைக்கு இப்பிரச்னையை ஊத்தி மூடுவதற்கும், தனது அல்லக்கைகளின் வழியில் இப்பணியை செலவின்றி  - வருவாயோடு செய்துக்கொள்வதற்கும்   வழிவகைத்தேடிக்கொண்டு உள்ளார் என்றே கருதிட வேண்டி உள்ளது.

மர்மதேசம்-விடாது கருப்பு  சின்னத்திரை தொடர் முடிவுக்கு வந்தாலும் வரும், இப்பிரச்னை இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கருதுகிறது.

காரணம் யாதெனில் ,
காசு...பணம்...துட்டு...

பசுந்தோல் போர்த்திய கயவர்களை அம்பலப்படுத்துவோம்!
ஆசிரியப் பெருமக்களின் 
 காசுக்கும்-பணத்திற்கும் 
 நாவில் எச்சில் ஊற காத்திருக்கும் ஓநாய்களை விரட்டியடிப்போம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பீர்!.
நன்றி!
-முருகசெல்வராசன் & மெ.சங்கர்.

அக்டோபர் 22,வரலாற்றில் இன்று.முன்னோடி தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா அவர்களின் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 22,
வரலாற்றில் இன்று.

முன்னோடி தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 
அவர்களின் நினைவு தினம் இன்று.


திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் (1872) பிறந்தார். அங்கு பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதல் மாணவராகத் தேறி, அக்கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார்.

நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியில் 3 ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.

உப்பு சுங்க இலாகா தேர்வில் முதலிடம் பெற்றவர், ஆந்திராவின் கஞ்சம் மாவட்டத்தில் உப்பு ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பணி நிமித்தமாக குதிரையில் பல மைல்கள் பயணம் செய்வார். குதிரை சவாரி மிகவும் பிடிக்கும்.

கடமை வீரர், கடும் உழைப்பாளி, கொடையாளி, நகைச்சுவை உணர்வு உடையவர். ‘மாதவையா களங்கமற்ற அதிகாரி. ஒரு எலுமிச்சை பழத்தைக்கூடக் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டார்’ என்பார்களாம் சக ஊழியர்கள். கர்னாடக சங்கீதம், நாட்டுப்புற இசை இரண்டையும் விரும்பிக் கேட்பார்.



இவர் பணியாற்றிய பல ஊர்களில் மருத்துவ வசதி கிடையாது என்பதால், தன் பிள்ளைகளுக்கு இவர்தான் குடும்ப வைத்தியர். மருத்துவப் புத்தகம், முதலுதவிப் பெட்டி, மருந்துகள் எந்நேரமும் அவரது வீட்டில் இருக்குமாம்.

தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். தெலுங்கும் தெரியும். 20 வயது முதல் பத்திரிகைகளுக்கு எழுதினார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். சங்க இலக்கியம் முதல் அனைத்து செவ்வியல் படைப்புகள், அரிய ஆங்கில இலக்கிய நூல்கள் என ஒரு நூலகம் வைக்கும் அளவுக்கு நூல்களை சேகரித்திருந்தார்.

இவரது நண்பர் சி.வி.சுவாமிநாத ஐயர் தொடங்கிய ‘விவேக சிந்தாமணி’ பத்திரிகையில் ‘சாவித்திரியின் கதை’ என்ற தொடரை எழுதினார். இது 1903-ல் ‘முத்துமீனாட்சி’ என்ற நாவலாக வெளிவந்தது. தனது புகழ்பெற்ற ‘பத்மாவதி சரித்திரம்’ நாவலின் முதல் 2 பகுதிகளை 1898-1899ல் எழுதினார். 1924-ல் எழுதத் தொடங்கிய 3-ம் பாகம் முழுமை அடையவில்லை.

 ‘இந்திய கும்மி’ என்ற கவிதைப் போட்டி 1914-ல் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ பாடலுக்காக பாரதிக்கு 2-ம் பரிசு கிடைத்தது.

 ‘பஞ்சாமிர்தம்’ என்ற பத்திரிகையை 1925-ல் தொடங்கினார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள், ஏராளமான கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.



சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 53.