வியாழன், 22 அக்டோபர், 2020

இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலரின் பொறுப்பின் கடமை தவறிய , முறையற்ற ,சுயலாபம் நிறைந்த, குழுவாதப் போக்குடைய முறையற்றச் செயல்பாடுகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் புகாராக கல்வித்துறை உயர் அலுவலர்களிடம் பதிவு செய்தல் தொடர்பாக...

அன்பானவர்களே! வணக்கம்!
இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலரின் பொறுப்பின் கடமை தவறிய , முறையற்ற ,
சுயலாபம் நிறைந்த, குழுவாதப் போக்குடைய முறையற்றச் செயல்பாடுகளை கடந்தாண்டே (2019) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் புகாராக கல்வித்துறை உயர் அலுவலர்களிடம் பதிவு செய்தது.
இதன் பின்னர் தலைமைஆசிரியர் கூட்டம் நடத்தி ஆசிரியர்மன்றத்திற்கு  எதிராக சிலரை தூண்டி விட்டு குளிர்காய்ந்துக்கொண்டு , ஆசிரியர் மன்றத்தின் மீது சில அல்லக்கைகளின் துணையை வைத்துக்கொண்டு அவதூறுகளை அள்ளி வீசிப்பார்த்தார்.
ஆனாலும் இவைகள் எதுவும் எடுபடாத நிலையில்,வேறு வழியின்றி மேற்கண்ட அலுவலர் மிகுந்த வீறாப்புடன் தானே (அலுவலக நிர்வாகமே) வருமானவரித் தொகையை இடிடீஎச் (E-TDS) செய்து விடுவதாக உறுதி கூறினார். அப்போதைக்கு இப்பிரச்னையை இத்தகு உறுதிமொழி கூறி முடித்துக்கொண்டார்.
மேற்கண்ட அலுவலர் இந்த உறுதிமொழியை இன்றையவரையிலும் (19.10.2020)வரையிலும் காப்பாற்றிட வில்லை என்றே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்துஉள்ளது.
இப்புகாரின் அடிப்படையில் இராசீபுரம் வட்டாரக்கல்வி அலுவலரை அலைபேசியில் அழைத்து ஒருவாரக் காலத்திற்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணுமாறு நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரை வழங்கி உள்ளார்கள்.
நாமக்கல் மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரையை அடுத்து தன்னை பாதுக்காத்துக்கொள்ளும் வகையிலும், தனது சில அல்லக்கைகளை காப்பாற்றிடும் நிலையிலும் தானே (அலுவலக நிர்வாகமே) படிவம் 16 பெற்றுத்தருவதாக புலனக்குழுவில் தகவல் பதிவு செய்து உள்ளார்.
தற்காலிகமாக , இப்போதைக்கு இப்பிரச்னையை ஊத்தி மூடுவதற்கும், தனது அல்லக்கைகளின் வழியில் இப்பணியை செலவின்றி  - வருவாயோடு செய்துக்கொள்வதற்கும்   வழிவகைத்தேடிக்கொண்டு உள்ளார் என்றே கருதிட வேண்டி உள்ளது.

மர்மதேசம்-விடாது கருப்பு  சின்னத்திரை தொடர் முடிவுக்கு வந்தாலும் வரும், இப்பிரச்னை இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கருதுகிறது.

காரணம் யாதெனில் ,
காசு...பணம்...துட்டு...

பசுந்தோல் போர்த்திய கயவர்களை அம்பலப்படுத்துவோம்!
ஆசிரியப் பெருமக்களின் 
 காசுக்கும்-பணத்திற்கும் 
 நாவில் எச்சில் ஊற காத்திருக்கும் ஓநாய்களை விரட்டியடிப்போம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பீர்!.
நன்றி!
-முருகசெல்வராசன் & மெ.சங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக