திங்கள், 23 நவம்பர், 2020
*☀️ஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy*
*☀️ஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy*
தணிக்கை ஆட்சேபனையை மறுத்த ஓய்வூதியர் உரிய ஆதாரங்களுடன் கருவூலக கணக்குத் துறைக்கு கடிதம்அனுப்பிய சூழ்நிலையில்கருவூலகணக்குத்துறை ஆணையர் திருவள்ளூர் கருவூலத்திற்கு 28-10-20ல்கடிதம் எழுதி தனது தணிக்கைத்தடை சார்பான திரும்பபெற்றுள்ள ஆணை.
தணிக்கை ஆட்சேபணை உஷார் !
***********************************
சென்னை பூந்தமல்லி சார்நிலை கருவூலத்தில்
தணிக்கை ஆட்சேபணை என்ற பெயரில் டி.வடி
வேலு, R.T.O.(Retd) அவர்களின் ஓய்வூதியத்திலி
ருந்து ( சி226793)எவ்வித முன்னறிவிப்பும்
இன்றி 10 மாதங்களுக்கு தலா ரூ 12417/-வீதம்
பிடித்தம் ஏப்ரல் 2020 மாதத்திலிருந்து துவக்கப்
பட்டது.தணிக்கை ஆட்சேபணையினை மறுத்து
ஓய்வூதியர் கொடுத்த கடிதங்கள் பேரில் ஒரு
நடவடிக்கையும் இல்லை.எனவே நமது சங்கத்தை அணுகினார்.
ஓய்வூதியர்களுக்கு தவறாக Over payment செ
ய்தால்,அவற்றை எவ்வாறு அணுக வேண்டும்
என உச்சநீதிமன்றம் State of Punjab and others
-Vs -Rafiz Mash (2014-8 SCC883) and (2015-4CC
334)ல் விரிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.இம்மா
திரி பிடித்தங்களை செய்யுமுன் நோட்டீஸ் வழங்கி விளக்கம் பெறவேண்டும் எனவும்
உச்சநீதிமன்றம் கடுமையாக வலியுறுத்தி
யுள்ளது.இவற்றை சுட்டிக்காட்டி நமது சங்கம்
12-10-20 ல் கடிதம் அனுப்பியது.
மேலும் தணிக்கை ஆட்சேபணையினை
ஓய்வூதியர் மறுத்து ஆதாரங்களுடன் கடிதம்
அனுப்பியிருந்தார். இந்த சூழ்நிலையில்
கருவூலகணக்குத்துறை ஆணையர் திருவள்ளூர் கருவூலத்திற்கு 28-10-20ல்
கடிதம் எழுதி தனது ஆணையினை திரும்ப
பெற்றுள்ளார்.
தணிக்கை ஆட்சேபணை என்ற பெயரில்
இம்மாதிரி பல விதிமீறல்களை செய்து ஓய்வூ
திய பிடித்தங்களை உத்திரவிடும் போக்கை
முறியடிக்க தயாராவோம் !
நன்றி:
திரு.கிருஷ்ணன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்சங்கம்.
💥BLO DUTY- யில் இருக்கும் ஆசிரியர்கள் சட்டமன்ற தேர்தல்-2021 பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரும் விண்ணப்பம்.
💥 BLO DUTY- யில் இருக்கும் ஆசிரியர்கள் சட்டமன்ற தேர்தல்-2021 பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரும் விண்ணப்பம்.
ஞாயிறு, 22 நவம்பர், 2020
கல்வி தொலைக்காட்சி- மாணவர்களுக்கு பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து இணையதளம் மூலமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தல் சார்ந்து கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலரின் செயல்முறைகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி - நிகழ்ச்சி நிரல் புதிய அட்டவணை.
கல்வி தொலைக்காட்சி- மாணவர்களுக்கு பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து இணையதளம் மூலமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தல் சார்ந்து கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலரின் செயல்முறைகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி - நிகழ்ச்சி நிரல் புதிய அட்டவணை.
சனி, 21 நவம்பர், 2020
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலச்செயற்குழு!எதிர்வரும் 28.11.2020 அன்று தஞ்சாவூரில் கூடுகிறது!மாநிலச்செயற்குழு உறுப்பினர்களே!கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி தவறாது பங்கேற்பீர்!மாநிலத் தலைவர் முனைவர்- மன்றம் நா.சண்முகநாதன் அழைப்பு!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலச்செயற்குழு!
எதிர்வரும் 28.11.2020
அன்று தஞ்சாவூரில் கூடுகிறது!
மாநிலச்செயற்குழு உறுப்பினர்களே!
கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி தவறாது பங்கேற்பீர்!
மாநிலத்
தலைவர் முனைவர்- மன்றம் நா.சண்முகநாதன் அழைப்பு!
12 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைக்கு மேல் உள்ளனர்.எனவே, 30 வருடத்திற்கு மேல் பணியாற்றுபவர்களுக்குவி.ஆர்.எஸ்.,திட்டம்?பள்ளிக்கல்வித்துறையில் ஆலோசனை?
12 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைக்கு மேல் உள்ளனர்.எனவே, 30 வருடத்திற்கு மேல் பணியாற்றுபவர்களுக்கு
வி.ஆர்.எஸ்.,திட்டம்?
பள்ளிக்கல்வித்துறையில் ஆலோசனை?
பாவலரின் ஆன்மா ஏற்காது!மன்னிக்காது!*******************அய்யகோ!அய்யகோ!சங்க சனநாயகத்தை குழித்தோண்டி புதைப்பதை பாவலரின் ஆன்மா ஏற்குமா?மன்னிக்குமா?-மாநில தலைவர் முனைவர் மன்றம் திரு.நா.சண்முகநாதன்.
*பாவலரின்*
*ஆன்மா* *ஏற்காது!மன்னிக்காது!*
*****************
*அய்யகோ!*
*அய்யகோ!*
*சங்க* *சனநாயகத்தை குழித்தோண்டி* *புதைப்பதை*
*பாவலரின்*
*ஆன்மா* *ஏற்குமா?மன்னிக்குமா?*
*பாவிகளே*! *பாவிகளே!*
*மகா பாவிகளே!*
*சொந்தநலனுக்கும்,*
*பதவி சுகத்திற்கும் மன்றத்தை* *பிளவு படுத்தலாமா*? *ஒற்றுமையை* *சிதைக்கலாமா?*
*மாவட்டச்செயலாளர்*
*கூட்டம்**
*நடைபெறவில்லை!*
*மன்றச்செயற்குழு கூட்டப்படவில்லை!*
*மன்றப்பொதுக்குழு நடக்கவே இல்லை!*
*நான் தான் பொதுச்செயலாளர் என்று தனக்குதானே அறிவித்துக்கொள்வது அறிவிலித்தனம் இல்லையா?*
*தனக்குத்தானே* *பொதுச்செயலாளர் மகுடம்* *சூடிக்கொள்வது*
*அற்பப்புத்திதானே!*
*பதவி வெறிதானே!*
*கடைகோடி மறவரும்-மறத்தியரும்*
*செய்திட்ட தியாகத்தால் கட்டமைக்கப்பட்ட* *மன்றக்கோட்டைக்குள்*
*கருங்காலித்தனம்*
*நிலைக்குமா?*
*நிலைக்கவே நிலைக்காது*! *கருந்நாகம்*
*குடிபுகத்தான் இயலுமா*? *நீடித்து்நிலைத்து* *வாழ்ந்திடத்தான்* *முடியுமா?*
*பாவலர்படத்திறப்பு என்று பெயர்சூட்டி ஒருசாராருக்கு மட்டும் அழைப்புத்தந்து**
*சிறுங்கூட்டம் கூட்டியதில் பட்டாபிசேகம் செய்துக்கொண்டு*
*அரிதாரம் பூசிக்கொள்வதும்,*
*அவதாரம்* *எடுப்பதும்*
*உண்மையிலேயே* *உண்மையான*
*ஒரு அசலான மன்றத்துக்காரன்*
*செய்வானா?*
*பதவிஆசையில்*
*விலைப்போய்* *விட்டீர்கள்!"*
*பதவி* *வெறியனை விலைக்கொடுத்து*
*மன்றத்து சொத்து-சுகங்களை*
**தனத்தாக்கிக்*
*கொள்வரோ?*
*அசலான* *மன்றத்து*
*மறவரும்,மறத்தியரும்*
*ஒன்று கூடுவோம்!*
*வென்று* *காட்டுவோம்!*
*மன்றம் எங்களுடையது!*
*அசலான மறவர்-மறத்தியர் நாங்களென *பிரகடனம் செய்வோம்!**
*களமாடுவோம்!*
*வெற்றி வாகை சூடுவோம்!*
*முனைவர்.மன்றம்*
*திரு. நா.சண்முகநாதன்*, *மாநிலத்தலைவர்.*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)