சனி, 5 டிசம்பர், 2020

சமஸ்கிருதத்தைச் சீராட்டும் மத்திய அரசு, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தை, மைசூருவில் உள்ள பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முடிவை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சமஸ்கிருதத்தைச் சீராட்டும் மத்திய அரசு, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தை, மைசூருவில் உள்ள பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முடிவை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்!

முதலமைச்சர் திரு. பழனிசாமி அனைத்துப் பிரச்சினைகளிலும் அமைதி காப்பது போல், பாஜக அரசின்  இந்த முடிவையும் ஆமோதிக்காமல், அதனைக் கைவிட வலியுறுத்தி உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சகத்தில் காலிப்பணியிடங்கள் !தகவல் உரிமைச்சட்டப்பதில்கள்!பணியாளர் இல்லாமல் முடங்கி கிடக்கும் மத்திய கல்வி அமைச்சகம் !

மத்திய கல்வி அமைச்சகத்தில் காலிப்பணியிடங்கள் !
தகவல் உரிமைச்சட்டப்பதில்கள்!


பணியாளர் இல்லாமல் முடங்கி கிடக்கும் மத்திய கல்வி அமைச்சகம் ! 

  தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக சில தகவல்களை பெற மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மனு அனுப்பியிருந்தேன்.

 அதில் கிடைத்த பதில்களை இதனுடன் இணைத்துள்ளேன் ! 

 மத்தியகல்வி அமைச்சர் அலுவலகத்தில் கூட காலிப்பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு மெத்தனமாக இருப்பது கல்வி வளர்ச்சியில் மத்திய அரசின் உண்மையான அக்கறை தெரியவருகிறது ! 

  தற்போது பணியாற்றிவருபவர்களின் எண்ணிக்கை 754 

 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 326 

 

 நாடு முழுவதும் உள்ள IIT,IIM,IISE,மத்தியபல்கலைகழகங்கள் என அனைத்து நிறுவனங்களின் நிலையும் இது தான் ! 

 கல்வி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்காமல் கொள்கையை அறிவிப்பதும்,மேடையில் முழங்குவதும் மக்களை ஏமாற்றும் செயல் ! 

 மத்திய அரசிற்கு உண்மையான அக்கறை இருக்குமானால் மத்திய அரசின் கல்வித்துறை,கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் அனைத்து பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்களையும் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் !

 இதை செய்யாமல் புதியகல்வி கொள்கையை அமுல்படுத்தி கல்வியில் மாற்றம் செய்வோம் என கூச்சலிடுவது எந்த பலனையும் தராது ! 

 ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் அமைச்சக அதிகாரிகள் பற்றாகுறை உள்ள நிலையில் அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் சொற்பொழிவில் எதையும் முறையாக கவனிக்க இயலாமல் நிர்வாக சீர்குழைவு தான் ஏற்படும் ! 

 தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் ! 

 ஆத்த மாட்டாதவன் கையில் ( .. )58 அறிவாளாம் ! 

 மத்தியகல்வி அமைச்சகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பணியாளர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பது வியப்பளிக்கிறது ! 

 மத்திய கல்விதுறை பதிலை இதனுடன் இணைத்துள்ளேன்.

வே.ஈசுவரன், மதிமுக.

வெள்ளி, 4 டிசம்பர், 2020

*💫ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-AWP & B 2021-22 ஆண்டு வரைவுத்திட்டம் தயாரித்தல்-வட்டார மற்றும் பள்ளி அளவில் தயாரிப்புப்பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பான நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*💫ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-AWP & B 2021-22 ஆண்டு வரைவுத்திட்டம் தயாரித்தல்-வட்டார மற்றும் பள்ளி அளவில் தயாரிப்புப்பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பான நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*💥 DGE - NTSE Exam - தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 - பள்ளிகளிடமிருந்து Summary Report - ஐ பெறுதல் - தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி வெளியீடு**👉 தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செலுத்த முடியாத பள்ளிகள் வங்கி வரைவோலையாக செலுத்தலாம் என அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!!!*

*💥 DGE - NTSE Exam - தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 - பள்ளிகளிடமிருந்து Summary Report - ஐ பெறுதல் - தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி வெளியீடு*

*👉 தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செலுத்த முடியாத பள்ளிகள் வங்கி வரைவோலையாக செலுத்தலாம் என அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!!!*

*🌻 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட முழுமையான தகவல் தொகுப்பு *

*🌻 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட முழுமையான தகவல் தொகுப்பு *
தகவல் தொகுப்பினைப் படிக்க இங்கே கிளிக் செய்க.
click here

பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

ஆண்களின் உடையில் பாக்கெட் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால் பெண்களின் உடையில் அது அவசியமற்றதாக கருதப்படுகிறது; அல்லது முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, ஏன் ?

By வினவு செய்திப் பிரிவு -December 3, 2020
வரலாறு முழுக்க பெண்களின் ஆடைகளில் பாக்கெட்டுக்கு ஏன் இடமில்லாமல் போனது என்பதற்கும் ஆண்கள் ஆடைகளில் ஏன் இடமிருந்தது என்பதற்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது.

வீட்டிலிருந்து எப்போது புறப்பட்டாலும் வீட்டைப்பூட்டிய பின் சாவி அண்ணனின் கைக்கோ அல்லது அப்பாவின் கைகளுக்கோ தான் போகும். அப்படித்தான் கார் சாவியும். ஏனெனில் அவர்களிடம்தான் சட்டைப்பை இருக்கும். அப்போது நம்மிடம் கிட்டெ இல்ல. அன்று பெண்களிடம் கைப்பை பெருமளவில் இல்லையென்றாலும், இன்று பெண்களிடம் கைப்பை இருக்கும் காலத்திலும் சாவி இடம்பெருவது என்னமோ அந்த சொக்காயில் தான்.

அந்தக்காலத்தில் நமது பாட்டியெல்லாம் ஓரு சுருக்குப் பை தான் வைத்திருந்து பாத்திருப்போம். அவரவர்களுக்கு  தேவையானது எல்லாம் அந்த பைக்குள் தான் இருக்கும். ஆனால் தாத்தா எப்போவும் பட்டாப்பட்டி கால் டிரோசர் பையிலும்,  சட்டையிலும்தான் காசு வைத்திருப்பார். ஆனால் நமது பாட்டியிடம் நாம், “ஏன் பாட்டி நீயும் சட்டை பையில் வைக்காம சுருக்கு பைல வெச்சிருக்க?” என்று கேட்டதில்லை. ஏனெனில் அக்கேள்வி இயல்பாகவே நமக்குத் தோன்றுவதில்லை.

17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் எல்லாம், யாருடைய ஆடையிலும் பாக்கெட் இல்லை. எல்லாரும் பணத்தை இடுப்புத் துணியோடு சுற்றி முடிச்சு போட்டுதான் வைத்திருந்தார்கள். தொழில் புரட்சிவந்து தான் இந்த இடுப்புத்துணி முடிச்சை  சட்டைப்பையாக மாற்றியது. 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த சட்டைப்பை என்பது ஆடையில் ஓரு அடையாளத்தைப்  பெற்றது. அதுவும் ஆண்களுக்கு மட்டுமே.

ஏன் என்றால் ஆண் வேலை செய்து பணம் ஈட்டுபவர். பணத்தை வைக்க பாக்கெட் தேவை என்பதால் அவர்கள் உடையில் பாக்கெட் இடம்பெற்றது. அன்று பெண்களின் நிலைமை வீட்டு வேலையும், குழந்தைகளை பராமரிப்பது மட்டுமே என இருந்தது. அதற்குப் பிறகு தான் பெண்கள் தனது பொருட்களையும், தேவைகளையும் வைக்க துணியாலான ஒரு பையை தைத்தார்கள். அதில் அவர்களுக்கு தேவையான எல்லாம் வைத்துக்கொண்டார்கள்(இன்று பெண்கள் பயன்படுத்தும் பர்ஸ் அல்லது ஹான்டு பேக்  போன்று).

பொருளாதார ரீதியாக பெண்கள் ஆண்களைச் சார்ந்து இருப்பதையே, ஆண்களுக்கு மட்டும் ஆடைகளில் பாக்கெட்டுகள் வடிவமைக்கப்படுவது வெளிப்படுத்தியது. ஆண் பெண் ஏற்றத்தாழ்வு  ஆடைகளிலும் வெளிப்பட்டது

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘Suffragettes Suit’ என்ற அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பெண்களின் ஆடைகளிலும் சட்டைப்பை வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். ஆனால் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு ஆண்களின் கைகளில் இருந்ததால் அவர்கள் அதை எதிர்த்தனர். அதன் பின் 1910-ல் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து பெண்களின் ஆடையிலும் குறைந்தது 6 சட்டைப்பைகள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை  ‘Suffragettes Suit’  இயக்கத்தின் மூலம் எல்லா இடங்களிலும் பேசப்பட்டது.

பிறகு 20-ம் நூற்றாண்டில், இரண்டாம் உலகப்போரின் மூலம் பெண்கள் இராணுவத்தில் ஈடுபட்டு போரை எதிர்கொண்டு பொருளும் ஈட்டினர். பெண்கள் போரை எதிர்கொள்ளவும்,  காயங்களை தடுப்பதற்கும், பணத்தை சேமிக்கவும் அவர்களின் ஆடையில் இடம் பிடித்தது பெரிய சட்டைப்பை. உலகப்போர்  1940ல் முடிவுற்ற பின் பெண்கள் ஆடையின் மேல் அதீத ஈர்ப்பும், உடலமைப்பிலும் கவனம் செலுத்தினர். அதன் பின் பெண்களின் கைப்பை நவநாகரிகம் என்று போர்வையில் மிண்டும் பிரபலமானது. திரும்பவும் சட்டைப்பை சடங்காக மாறியது

தற்போது பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமடைவதற்கான சூழல் ஓரளவிற்கு சாத்தியமாகியிருக்கும் நிலைமையிலேயே,  இன்றைக்கும் பெண்களின் ஆடைகளில் பாக்கெட் என்பது போலியாக வடிவமைக்கப்பட்ட ஓரு அங்கமாகவோ அல்லது பயன்படாத நிலையிலோதான் இடம்பெறுகிறது. பெண்கள் ஆண்களுக்கு நிகராக உடுத்தும் ஜீன்ஸ் கூட பாக்கெட் அளவு சராசரி ஆண்களின் பாக்கெட்டைவிட 48% நீளம் குறைவாகவே வடிவமைக்கப்படுகிறது. பெண்களுக்கு இருக்கும் பொருளாதார சுதந்திரம் பெயரளவிலானதுதான் என்பதை அந்த பாக்கெட்டின் அளவே நமக்குப் பறைசாற்றப்படுகிறது.

இன்றும் பெண்கள் சட்டைப்பை புரட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் #ithaspockets என்ற “டேக்”-ல் பல ஆயிரம்  பேர் பாக்கெட் உள்ள பெண்களின் உடைகளை பதிவிட்டு பின்தொடர்கிறார்கள். பெண்கள் வாங்கும் ஆடைகளில் பாக்கெட் அவசியம் வேண்டும் என 78℅ பெண்கள் விரும்புகின்றனர்.

பெண்கள் தங்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ஆடை வடிவமைப்பாளர்கள், “Perfect Pants answer this call. பெரிய, பயன்படுத்த கூடிய பைகள் கொண்ட உடை” என்று விளம்பரப்படுத்தும் காலம் விரைவில் வரும்.

வரலாறு முழுவதும், பெண்களின் உரிமைகளில் முன்னேற்ற காலங்களுடனும், பாலின சமத்துவத்துடனும் பாக்கெட்டுகள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. பாக்கெட்டுகள் சுயேட்சை மற்றும் பொருளாதார அதிகாரத்தை குறிக்கின்றன. அடுத்த முறை உங்கள் அலைபேசியை உங்கள் பேண்ட் பாக்கெட்டில் பொருத்த முயற்சிக்கும்போது, ​​தோல்வியுற்றால், நீங்கள் பல நூற்றாண்டுகள் நீடித்த போரின் ஒரு பகுதியாக இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்...

மாநிலச்செயற்குழுவினை வெற்றிகரமாக்கிய மன்றப்படையே!தஞ்சைப் பொதுக்குழுவினை மகத்தான வெற்றி பெறச்செய்யுங்கள்!நன்றி!-இவண்,முனைவர்-மன்றம்.நா.சண்முகநாதன்,மாநிலத்தலைவர்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

*அன்பு வேண்டுகோள்!*
************************
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர்- பொதுச் செயலாளர் பாவலர் திரு.க.மீ., அவர்களின் விருப்பங்களை நெஞ்சினில் சுமந்து, ஐயா அவர்களின் பாதைமாறாதப் பயணத்தில் பயணிக்கிறேன். அனைவரையும் வணங்குகிறேன்*.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுக்குழு எதிர்வரும் 16.12.2020 பிற்பகல் 03.00மணிக்கு அன்று தஞ்சாவூரில் நடைபெறுகிறது*.

*மக்களாட்சித் தத்துவத்தின்படி, சங்க சனநாயக நெறிமுறைகளின்படி* ,
*ஆசிரியர் மன்றத்தின் அமைப்பு விதிகளின்படி  28.11.2020 அன்று தஞ்சையில் கூடிய* *மாநிலச்செயற்குழுமுடிவின்படி எதிர்வரும் *16.12.2020 அன்று முற்பகல் 09.30மணிக்கு தஞ்சாவூரில் பொதுச்செயலாளர் காலியிடத்திற்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது*.
*மேற்கண்ட தேர்தல் நடவடிக்கைகளிலும்,* *பொதுக்குழு கூட்டத்திலும் தாங்கள் எல்லோரும் தவறாது* 
*பங்கேற்றும்- பங்களிப்புச் செய்தும்*
*எதிர்காலப் பணிகளை திட்டமிடுவோம் செயலாற்றுவோம்!*

*மாநிலச்செயற்குழுவினை வெற்றிகரமாக்கிய   மன்றப்படையே!தஞ்சைப் பொதுக்குழுவினை  மகத்தான வெற்றி பெறச்செய்யுங்கள்!*
*நன்றி!*
*இவண்,*
*முனைவர்-மன்றம்.*
*நா.சண்முகநாதன்,*
*மாநிலத்தலைவர்*,
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.*

கல்வி தீபம் அணையாதிருக்க...தீக்கதிர் -தலையங்கம்...

கல்வி தீபம் அணையாதிருக்க...

மத்திய பாஜக அரசு அரசியல் சட்டப்படி ஆட்சி செய்வதை விட ஆர்எஸ்எஸ்ஸின் கோட்பாடான மனுஸ்மிருதியின்படியிலான மறைமுக ஆட்சியை நடத்துவதையே விரும்புகிறது. 

அதன் பிரதிபலிப்பை நாட்டின் பல்வேறு துறைகளிலும் காண முடிகிறது. 

ஒரு நாட்டின் அறிவுச் செல்வம் என்பது அதன்இளைய தலைமுறையான மாணவர்களை சார்ந்ததாகும். 

அவர்களுக்கு சிறந்த முறையிலான கல்வி வழங்குவதற்கு அரசாங்கம் செய்யும்செலவு நாட்டின் அறிவுசார் முதலீடாகும். ஆனால் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ஆறு சதவீத நிதியை ஒதுக்க வேண்டுமென்ற கோத்தாரி கமிஷன் பரிந்துரையை செயல்படுத்துவதேயில்லை. 

ஆனால் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும் அளவையும் குறைக்கிற வேலையையே செய்து வருகிறது. 

அத்தகைய வழியிலேயே புதிய தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் கல்வியை தாரை வார்க்கும் செயலையே மேற்கொள்கிறது மோடி அரசு. 

அத்துடன் நடைமுறையில் இருக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் கூடஒழித்துக்கட்டும் முயற்சியிலேயே ஈடுபட்டிருக்கிறது. 

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்படும் உதவித்தொகை நிறுத்தப்படுவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறது அல்லது அதை மாநில அரசுகளின் தலையில் கட்டிவிடலாம் என்று முயற்சிக்கிறது. 

குறிப்பாக போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டநிதியை முன்பு மத்திய அரசே முழுவதும் வழங்கியது. 

பின்பு சதவிகித அடிப்படையில் மாநில அரசுகளை பகிர்ந்துகொள்ளச் செய்தது. தற்போது முழுவதுமாக மாநிலங்களையே சுமக்கச் செய்யும் வகையில் காய்களை நகர்த்தியது. 

அதை எதிர்த்து மாநிலங்கள் குரல் கொடுத்த நிலையில் பத்து சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்றும், மீதியை மாநிலங்கள் வழங்க வேண்டுமென்றும் கூறியது. ஆனால் அதற்கு ஒத்துக்கொள்ளாத மாநில அரசுகளின் நிலைபாட்டால் ஏற்கெனவே வழங்கிய 60:40 விகிதத்தை அமல்படுத்திட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஒத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆயினும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல்போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைவழங்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் பட்டியலினமாணவர்கள் 60 லட்சத்திற்கும்மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது மத்திய அரசின்தலித் விரோத செயல்பாட்டையே உணர்த்துகிறது. ஏற்கெனவே மாணவர்களுக்கு வழங்கிவரும் உதவித்தொகையின் அளவை அதிகரிக்கவேண்டுமென்ற கோரிக்கையை உதாசீனம் செய்துவிட்டு, உள்ளதையும் பறிக்க முயற்சிப்பதுநாட்டின் ஒரு பகுதி மக்களை கல்வியறிவற்றவர்களாக ஆக்குகிற சதியாகும். 

எனவே இத்தகைய நடவடிக்கையை கைவிட்டு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்குவதற்கு உரிய நிதியை ஒதுக்கி கல்வி தீபத்தை அணையாமல் காத்திடவேண்டும்.

# தீக்கதிர் தலையங்கம்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

*☀️ பள்ளி வரைபட பயிற்சி 2020--2021 மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குநர் கடிதம்*

*☀️ பள்ளி வரைபட பயிற்சி 2020--2021 மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குநர் கடிதம்*

இயக்குநர் கடிதத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்க.