சனி, 12 டிசம்பர், 2020

தற்போதைக்கு பள்ளி திறப்பு இல்லை! பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!

தற்போதைக்கு பள்ளி திறப்பு இல்லை! பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இம் மாதம் திறக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நிலவிவருகிறது. இதனையடுத்து இந்த மாதம் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளை திறப்பதற்கான முடிவை முதல்வருடன் கலந்து பேசி அறிவிப்போம் என்றும் தெரிவித்தார். கல்லூரி தொடங்கிய நிலையில், பள்ளிகளும் இம்மாதம் திறக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில், செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

*☀️தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் - GOVT LETTER*

*☀️தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் - GOVT LETTER*

*💸SBI வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையா..? தற்போது வசூலிக்கப்படும் புதிய கட்டணம் எவ்வளவு..?*

*💸SBI வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையா..? தற்போது வசூலிக்கப்படும் புதிய கட்டணம் எவ்வளவு..?*

 

*எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகை வைக்கவில்லை என்றால் வசூலிக்கப்படும் தொகை விவரம் குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.*


 
*எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு வைக்க வேண்டும். மெட்ரோ நகரங்கள், நகர்ப்புறங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் என தனித்தனியே இந்தக் கட்டாய மினிமம் பேலன்ஸ் தொகை மாறுபடும். குறிப்பிட்ட தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதக் கட்டணத் தொகையும் வசூலிக்கப்படும்.*

*மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் குறைந்தபட்சம் 3,000 ரூபாயை தங்களது எஸ்பிஐ கணக்கில் மினிமம் பேலன்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும். புறநகர்ப் பகுதிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு 2,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் ஆக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ளோர் 1,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.*

*மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறினால் அதிகப்பட்சமாக 15 ரூபாய்+ ஜிஎஸ்டி, புறநகர்ப்புறங்களில் உள்ளோர் தவறினால் அதிகப்பட்சமாக 12 ரூபாய் +ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புறங்களில் உள்ளோருக்கு அதிகப்பட்சமாக 10 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதக் கட்டணமாக வசூலிக்கப்படும்.*

வெள்ளி, 11 டிசம்பர், 2020

*📘ஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி ? உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் ?*

*📘ஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி ? உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் ?*



ஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி ? உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் ? (uidai.gov.in)



AADHAAR NEW UPDATE : உங்களின் செல்போனில் நீங்களே பிறந்த தேதி, பெயர், முகவரி மாற்றம் செய்யும் முறை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயனடையுங்கள்...மற்றவர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்..



இ சேவை மையம் செல்லாமல் உங்கள் ஆதாரில் வீட்டிலிருந்தே உங்கள் mobile/ laptop மூலம்



http://ssup.uidai.gov.in/ssup/login.html



என்ற இணைய தளத்தை பயன்படுத்தி பெயர், பிறந்த தேதி , முகவரி மாற்றம் செய்யலாம்.





புதிதாக update செய்யும் போது பதிவு செய்யும் விவரங்களும் upload document யில் உள்ள விவரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.


பெயர் ,பிறந்த தேதி ,முகவரி மாற்ற ₹ 50 online மூலம் செலுத்த வேண்டும்.




கட்டணம் செலுத்திய உடன் speed post மூலம் புதிய ஆதார் அடையாள அட்டை உங்கள் வீடு தேடி வரும்.

COLOUR AADHAAR PVC CARD- விண்ணப்பிக்கும் முறை :



 
https://uidai.gov.in என்ற இணைய தளத்தில் my Aadhaar இல் order Aadhaar PVC card click செய்து உங்கள் 12 இலக்க ஆதார் எண் ,captcha,OTP யை type செய்து ₹ 50 online யில் செலுத்தி speed post மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


உங்களின் ஆதாரில் ஏதேனும் தவறுகள் அல்லது எழுத்துப் பிழைகள் இருப்பின் அவற்றை எளிதில் சரி செய்துகொள்ள முடியும்.ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை இ-சேவை மையங்களிலும், தபால் நிலையங்களிலும் மாற்றம் செய்யலாம்.அதே போல் தற்போது நீங்களும் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் ஆகியவற்றை ஆன்லைனில் சரி செய்து கொள்ளலாம்.


வாங்க உங்களின் ஆதார் விவரங்களை உங்களின் செல்போனில் நீங்களே எவ்வாறு திருத்துவது என்று பார்ப்போம் :



மிக முக்கியமாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைத்திருந்தால் மட்டுமே நீங்கள் ஆன்லைனில் உங்கள் விவரங்களை மாற்ற முடியும்.



நீங்கள் எந்த செல்போன் எண்ணை பதிவு செய்திருக்கீற்களோ அந்த செல்போனில் ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை வைத்து ஆதாரை மாற்றமுடியும்



1. உங்களின் ஆதார் கார்டில் உள்ள முகவரி மாற்றம் செய்ய கீழே உள்ள ஆவணங்களில் ஒன்று கட்டாயம், எனவே இவற்றில் ஒன்றை கட்டயம் கையில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் :



வங்கி பாஸ்புக்,



தொலைபேசி கட்டணம் பில் ,



கேஸ் பில்,



பாஸ்போர்ட்,



ரேஷன் கார்டு,


வாக்காளர் அடையாள அட்டை,



டிரைவிங் லைசென்ஸ்.



மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் உங்களிடம் இல்லை எனில் நீங்கள் உங்கள் பகுதி VAO அல்லது குரூப்-ஏ நிலையில் உள்ள அரசு அதிகாரிகளிம் ஒப்பம் பெற்ற கடிதம் என, ஏதாவது ஒரு நகலை நீங்கள் சமர்ப்பித்தாக வேண்டும்.


இதற்கு நீங்கள் முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html என்ற இணையதளத்தை உங்களின் செல்போனில் ஓபன் செய்து கொள்ளுங்கள் .. பின்பு இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்யவும்.


பிறகு கீழ் கொடுக்கப்பட்டுள்ள கேப்சாவை சரியாக உள்ளீடு செய்து 'SUBMIT' என்ற OPTIONஐ கிளிக் செய்தால் தங்களின் மொபைல் எண்ணுக்கு OTP வரும்.. அந்த OTP யை உள்ளீடு செய்யவும், உள்ளீடு செய்த பின்பு உங்களின் ஆதரை திருத்தும் செய்வதற்க்கான OPTIONS வரும்.



முகவரியை மாற்றம் செய்வதற்கான OPTION-ஐ CLICK செய்யுங்கள். அதில் உங்களின் சரியான முகவரியை Update செய்த பிறகு, தேவையான சான்றிதழை Upload செய்ய வேண்டும். அதன் பிறகு பணம் செலுத்தும் வசதியை Click செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும், நீங்கள் ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி விடுவார்கள்.. இந்த ஆதார் கார்டானது உங்களுக்கு குறைந்தது பத்து முதல் பதினைந்து நாட்களுக்குள் வந்து சேரும்.


நீங்கள் SUBMIT செய்து முடித்த உடன் உங்களுக்கான URN NUMBER திரையில் தோன்றும்..



அதன் பிறகு நீங்கள் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.



நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள் அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா, இல்லையா என்று தெரிந்து கொள்ள



https://resident.uidai.gov.in/check-aadhaar

*☀️அரசு பள்ளிகளில் அலுவலகப் உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து அடிப்படை பணியிடங்கள் (Basic Servants Posts) விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!*

*☀️அரசு பள்ளிகளில் அலுவலகப் உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து அடிப்படை பணியிடங்கள் (Basic Servants Posts) விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!*
 
*தமிழ்நாடு அடிப்படைப் பணி - அலுவலகப் உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து அடிப்படை பணியிடங்கள் (Basic Servants Posts) விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!*

 
*இவ்வியக்கக கட்டுப்பாட்டிற்குட்பட்ட அனைத்து அலுவலகங்கள் மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படைப் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட விவரத்தை அலுவலக உதவியாளர் பணியிடம் தொடங்கி அதற்கு கீழ் அமைந்த அனைத்து பணியிடங்களுக்கும் பள்ளி அளவைப்பதிவேட்டை ஆய்வுசெய்து எவ்வித பணியிடமும் விடுபடாமல்*

*( i ) பார்வையிற் கண்டுள்ள செயல் முறைகளின்படிஅடிப்படைப்பணியாளர் பணியிடங்கள் கலைத்து முதன்மைக் கல்வி அலுவலர் வாரியாக ஆணைகள் வழங்கப்பட்டதில் கலைக்கப்பட்ட பணியிடம் விவரம் ( படிவம் - 1 )*

*( ii ) மீதமுள்ள பணியிட விவரம் ( படிவம் -II ) ( கலைக்கப்பட்ட பணியிங்கள் போக பணிபுரிவர்கள் ) தனித்தனியாக வருவாய் மாவட்ட அளவில் பணியிட வாரியாக தொகுத்து 15.12.2020 க்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

*பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு!!*

*பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு!*
கால அவகாசம் அளிக்கும் உத்தரவினைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

*🌻ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கம்- சங்க விதிமுறைகள்-செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் .

*🌻ஆசிரியர்களே,கூட்டுறவு சங்கத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும்.*

 
 *கூட்டுறவு சங்கம் அமைப்பு.*

*உறுப்பினர்கள் பேரவை:*

*🔖கூட்டுறவு தத்துவத்தின்படி உறுப்பினர்களின் பேரவையானது சங்கத்தின் ஒர் உயர்ந்த நிலை அமைப்பாகும்.*

*ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைவதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஒருமுறையாவது பேரவை கூடி கீழ்க்கண்டுள்ள பொருட்கள் பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.*

*ஆண்டு வரவு,செலவு திட்டம் ஒப்புதல் செய்தல்.*

*தணிக்கை அறிக்கை மற்றும் ஆண்டறிக்கையும் வாசித்து அங்கீகரித்தல்.*

*நிகர லாபப் பங்கீட்டினை அங்கீகரித்தல்.*

*சங்கத்தின் செயல்திட்டத்தை மதிப்பிடுதல்.*

 
*முந்தைய ஆண்டில் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் சேவைகளை கலந்துரையாடல். (அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சங்கம் செய்திருந்த சேவைகளின் விவரங்களை பரிசீலித்தல்.)*

*புதிய துணைவிதிகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது ஏற்கனவே உள்ள துணை விதிகளுக்கு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுதல்.*

*தகுதியற்ற உறுப்பினரை விலக்குவது பற்றி முடிவெடுத்தல்.*
*(கடன் பெற்று மூன்று மாதம் திருப்பி கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்கள்)*

*சங்கப் பேரவை நிர்வாகக் குழுவால் கூட்டப்படவேண்டும்.*

*சங்க பேரவையை சங்க அலுவலகத்தில் அல்லது சங்கத் தலைமையிடத்தில் அனைவரும் கலந்துகொள்ளும் வசதியான இடத்தில் கூட்ட வேண்டும்.*

*உறுப்பினர்களுக்கு துணை விதிகளில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பேரவைக் கூட்ட, முன் அறிவிப்பு அனுப்ப வேண்டும்.*

*நிர்வாகக் குழு:*

*ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகம் உறுப்பினர்களால் சட்டம் விதிகள் மற்றும் சங்க துணை விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.*

*நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவர் தலைவராகவும் இன்னொருவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.*

*நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.*

*நிர்வாகக் குழு கூட்டம்*
*நிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு 3 நாட்களுக்கு குறையாமல் முன்னறிவிப்புக் கொடுக்க வேண்டும்.*

*இக்கூட்டத்தை சங்கத்தின் செயல் எல்லையில் எங்கு வேண்டுமானாலும் கூட்டலாம்.*

*செயலாளர், தலைவருடன் அல்லது அவர் இல்லாத நேர்வில் துணைத்தலைவருடன் கலந்து, நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.*

*மேலாண்மை இயக்குநர் இல்லாதபோது தலைவர் நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்டவேண்டும்.*

*மூன்று மாதங்களுக்குள் குறைந்தது ஒரு முறையாவது நிர்வாகக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும்.*

 
*தலைவர் துணைத் தலைவர் தலைவர் பேரவைக் கூட்டத்தையும், நிர்வாகக்குழு கூட்டத்தையும் தலைமை தாங்கி நடத்தவேண்டும்.*

*சங்க துணை விதியில் குறிப்பிட்டுள்ளபடி சங்க நிர்வாகத்தை தலைவர் நடத்த வேண்டும்.*

*தலைவர் பதவி காலியாக உள்ளபோது, தலைவரின் அனைத்து அதிகாரங்களையும் துணைத் தலைவர் செயல்படுத்தலாம்.*

*கூட்டுறவு சங்கம் பார்வை👁👁👁👁*

 *கண்டிப்பாக தகவலை முழுவதும் வாசிக்கவும்...*

*Society Act-1983*
*Society Law-1988*
*ஒரு பார்வை...*

*கூட்டுறவு இயக்கத்தை முறையான வளர்ச்சி அடையச் செய்வதே கூட்டுறவுச் சட்டத்தின் நோக்கம்.*

*ஒவ்வொரு சங்கத்திலும் சட்டம் மற்றும் விதிப் புத்தகங்கள் கட்டடாயம் வைத்திருக்க வேண்டும்.*

*கூட்டுறவுச் சட்டம் மற்றும் விதிகளில் சொல்லப்பட்டிருப்பவற்றிற்கு உட்பட்டுத்தான் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகம் இருத்தல் வேண்டும்.*

*⚖சட்ட விதிகள்⚖*

*பிரிவு - 9 :*
*கூட்டுறவுச் சங்கத்தை பதிவு செய்தல் (120 நாட்கள்).*
*குறைந்தபட்சம் 25 உறுப்பினர்கள்..*

 
*பிரிவு - 1 விதி -9 :*
*பொதுவாக துணை விதித் திருத்தம் செய்தல் (120 நாட்கள்).*
*தேவைப்படும் போது DRO விடம் உறுப்பினர்கள் இணைந்து மாற்றலாம்.*
*உறுப்பினருக்கு நிர்வாக குழுவை மதிப்பிட உரிமை உள்ளது...*

*உறுப்பினர் யார் வந்து கேட்டாலும் பதில் சொல்லனுமா? என விதி ஒன்று கூட தெரியாமல் குதர்கமாக பேசக்கூடாது..*

*பிரிவு - 80:*
*தணிக்கை முடித்தல் (6 மாதங்கள்).*

*தேவையில்லாமல் காலம் கடத்திய பின் Audit பிரச்சனை என பொய் கூறக்கூடாது..*

*பிரிவு - 81:*
*விசாரணை முடித்தல் (3 மாதங்கள்).*

*தணிக்கை மீதும் , நிர்வாகம் மீதும் மேல்முறையீடு சார்பு.*

*பிரிவு - 87:*
*தண்டத்தீர்வை நடவடிக்கை முடித்தல் (6 மாதங்கள்).*

*நிர்வாக முறைகேடு கண்டறியப்பட்டால்..*


*பிரிவு - 88:*
*நிர்வாகக் குழுவை கலைக்க ஆணையிடுதல் (2 மாதங்கள்).*

*சங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்..*

*பிரிவு - 88:*
*நிர்வாக குழு கலைப்பு காலம் (6 மாதங்களுக்கு மிகாமல்).*

*சங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்..*

*பிரிவு - 89:*
*சில சூழ்நிலைகளில் தனி அலுவலர் நியமனம் (6 மாதங்களுக்கு மிகாமல்).*

*நிர்வாக குழு கலைக்கப்பட்டால்...*
*தேர்தல் கட்டுப்பாடு நடைமுறையில் கூட ...*
*உறுப்பினர் நலன் கருதி தனி அலுவலர் மூலமாக தாராளமாக (டிவிடண்ட்) பங்குத்தொகை வழங்கலாம்..*

*தேர்தல் காரணம் என பொய் சொல்ல கூடாது.*

*பிரிவு - 36:*
*நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தகுதியின்மை மற்றும் நீக்குதல்.*

*பிரிவு - 72 விதி 94:*
*நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்.*

 
*இலாபத்தில் வேலை செய்யும் சங்கங்கள்...*
*நிகர லாபத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் அதிக அளவு மாத மதிப்பூதியம்.*

*(உதாரணம்: தலைவர்/செயலாளர் - ரூ.1200 & இதர இயக்குநர்கள் - ரூ.2400 )*
*இப்ப பதவிக்கு ஏன் போட்டி போட்டுட்டு அரசியல் வருது என தெரியுதா?*

*முடிந்தால் ஆண்டறிக்கை நிர்வாக குழு பிரிண்ட் எடுத்து தர வேண்டும் தவறு ஒன்றும் இல்லை.*

*மாத ஆரம்ப இருப்பு தொகை , வரவு , மாத முடிவு தொகை & TDS தொகை... கூட்டம் கூட்டிய எண்ணிக்கை , கூட்டத்திற்கான டீ மிக்சர் செலவு ஆடிட் பண்ணுவதற்கான தொகை , ஆடிட் லஞ்சம் (தவறை பூசி மறைக்க) ஒன்று விடாமல் நிர்வாக குழு பிரிண்ட் தந்தால் நிர்வாகத்தில் எவ்வித குழப்பமும் இல்லை என அறிந்து கொள்ளலாம்.*

*இதில் ஆயுள் காப்பீடு என்று கொண்டுவந்தால் அதற்கான பாண்டை சார்ந்த ஆசிரியர்களிடம்* *கண்டிப்பாக வழங்க வேண்டும்.அந்த நிறுவனத்தின் பெயர் தெரிவிக்க வேண்டும்.*
*ஏனென்றால் அதையும் வருமான வரிக்கு உதவும்.*


*மேலும் சில விதிமுறைகள்:*

*1. நாம் பெறும் கடன் (₹5,00,000) தொகையில்*
*5% (₹25,000)வைப்பு தொகையாக பிடித்தம் செய்து மீதம் வழங்கப்படும்.*

*2. மாதம் சிக்கன சேமிப்பு தொகை இடவேண்டும் குறைந்த பட்சம்₹500 முதல்*

*3. நாம் வைத்திருக்கும் வைப்புதொகைக்கு 50,000 க்கு 14% வட்டியும்,சேமிப்பு தொகைக்கு 8 & 8.5% வட்டியும்  கூட்டுறவு சங்க வழங்க வேண்டும்.*

*4. இந்த கணக்கீடு ஒவ்வொரு வருடமும் தணிக்கை முடித்து, 1.ஏப்ரல் முதல் அடுத்த வருடம் 31மார்ச் வரை இலாபத்தொகை (Dividend) பங்கீட்டு வழங்க வேண்டும்.*

*📘மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் தேவையின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை முடிவு.*

*📘மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் தேவையின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை முடிவு.* 
 


*தமிழகத்தில், கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், --ஜனவரியில் திறக்கப்பட உள்ளன.*


*கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், தமிழகத்தில் மார்ச் முதல் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. தமிழகத்தில், பள்ளிகளை தவிர, கல்லுாரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் திறக்கப் பட்டு உள்ளன.*



*இதையடுத்து, பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுவும், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலும், நேரடி வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக, தனியார் பள்ளிகள் வலியுறுத்தி வருகின்றன.இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வி அதிகாரிகள், விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு விதிகள் உள்ளதால், சுகாதார துறையின் அனுமதி பெற்ற பின், ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என, முடிவு செய்துஉள்ளனர்.இதற்கான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகலாம்.*

*கூடுதல் ஆசிரியர்கள்:*


*இதற்கிடையில், கொரோனா ஊரடங்கால், தொழில்கள் நலிவுற்று, வருமானம் குறைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் இருந்து மாற்றி, அரசு பள்ளிகளில் சேர்த்தனர்.இதனால், அரசு பள்ளிகளில், இந்தாண்டு ஐந்து லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில், தேவையின் அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.*


*இதற்காக, தமிழகம் முழுதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சேகரிக்க, இணை இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, இதுகுறித்த சுற்றறிக்கை அனுப்பப் பட்டு உள்ளது.காலியிடங்களின் பட்டியல் வந்ததும், உபரியாக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து, தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.*

வியாழன், 10 டிசம்பர், 2020

ஊதிய குறைதீர்க்கும் குழு 2019-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சிறப்பு ஊதியத்தினை தனி ஊதியமாக மாற்றி ஆணையிடப்பட்டது-ஆணையினை செயல்படுத்துதல் தொடர்பாக.

ஊதிய குறைதீர்க்கும் குழு 2019-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சிறப்பு ஊதியத்தினை தனி ஊதியமாக மாற்றி ஆணையிடப்பட்டது-ஆணையினை செயல்படுத்துதல் தொடர்பாக.

*☀️பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி)உத்தரவு!!*

*☀️பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி)உத்தரவு!!!*

*இணைப்பு: மாதிரி படிவம்.*