புதன், 10 மார்ச், 2021

ஜூலை 2021 DA*மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

*ஜூலை 2021 DA*

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

*விளக்கம்*

*ஏற்கனவே வழங்கப்பட்டது*
ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரை 17% DA வழங்கப்பட்டது.

*நமக்கு வழங்க வேண்டிய DA*
(தோராயமாக)
01.01.2020 -2%
01.07.2020 - 2%
01.01.2021 - 2%
என தோராயமாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் இந்த 6% DA கோவிட் காரணமாக பணப்பலன் நிறுத்திவைக்கப்பட்டது.

*இனிமேல்*
தற்போது 01.07 2021 முதல் DA உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தோராயமாக 01.07 2021 அன்று 2% DA உயர்வு என வைத்துக்கொள்வோம்.

*மொத்தம் 25% DA*
கோவிட் காரணமாக நிறுதிவைக்கப்பட்ட 6% DA
மற்றும் 
ஜூலை 2021 2% DA 
என 
மொத்தம் 8% உயர்த்தி ஜூலை 2021 முதல் 25% DA கணக்கிடப்படும்

✍️பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையத்தில் வெளியீடு.

*✍️பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையத்தில் வெளியீடு...*


*பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வி நிறுவனம் மூலமாக பல்கலை தொழிற்சார் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.*


*தேர்வு முடிவுகள் வெளியீடு: சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வி நிறுவனம் பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. 1997 ஆம் ஆண்டு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் தொடக்கத்தில் வணிகவியல், புவி அமைப்பியல், கணிதம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டு வந்தன. தற்போது அதில் 20க்கு மேற்பட்ட பிரிவுகளில் பட்டப்படிப்புகள் உள்ளன.*


*இந்நிலையில் பல்கலைக்கழக தொழிற்சார் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன. இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020 ஆம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.*


*கொரோனா காரணமாக இந்த முடிவுகள் வெளியிட காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை எழுதி காத்திருக்கும் மாணவ, மாணவிகள் முடிவுகளை www.periyaruniversity.ac.in  என்ற பல்கலைக்கழக இணையத்தில் காணலாம்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.*

*😷தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கவச உடை (PPE) - ஏற்பாடு செய்கிறது தேர்தல் ஆணையம்...*

*😷தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கவச உடை (PPE) - ஏற்பாடு செய்கிறது தேர்தல் ஆணையம்...*


 *சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பி.பி.இ., உடை (முழு கவச உடை), வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை வழங்க, தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.*

*சட்டசபை தேர்தல் நடத்துவதால், 'கொரோனா' தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக, தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. வாக்காளர் அனைவருக்கும் சானிடைசர் வழங்கவும், வலது கையுறை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

 
*இதுகுறித்து, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் ராஜாமணி நேற்று கூறியதாவது: நம் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 4,427 ஓட்டுச்சாவடிகளில், 22,150 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். இவர்கள், 'கொரோனா' தடுப்புக்கான பி.பி.இ., உடை அணிந்து, பணியில் ஈடுபடுவர். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இருப்பர். இவர்கள், தற்போது வீடு வீடாக, தபால் ஓட்டுச்சீட்டுக்கான படிவங்களை வினியோகிக்கின்றனர்.*


 
*தேர்தல் நாளன்று, அதே ஓட்டுச்சாவடியில் பணியில் இருப்பர். மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துச் செல்ல, தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர்.ஓட்டளிக்க வரும் அனைவருக்கும், 'தெர்மல் ஸ்கேனிங்' செய்யவும், சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்யவும், கையுறை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கையுறை அணிந்த பிறகே, ஓட்டு இயந்திர பொத்தானை அழுத்த, வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவர்.*

 
*ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும், பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட முக கவசம், பி.பி.இ., உடை, கையுறை ஆகியவற்றை ஓட்டுச்சாவடி வாரியாக வாகனங்களில் சென்று சேகரித்து, உரிய முறையில் அழிக்கவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.*

*🌻முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு - டிஆர்பி தலைவர் பதிலளிக்க உத்தரவு...*

*🌻முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: வயது நிர்ணய தகுதியை நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வழக்கு - டிஆர்பி தலைவர் பதிலளிக்க உத்தரவு...*
 

*தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு: கடந்த பிப். 11ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான  அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான தகுதிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் தொடர்ந்து 5 முறை தேர்வெழுதிய நிலையில், கடந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பு  வரை சென்று, பணி அனுபவ மதிப்பெண்கள் இல்லாததால் பணி வாய்ப்பினை இழந்தேன். இதுவரை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு இல்லாத நிலையில், தற்போது புதிதாக வரம்பு உருவாக்கப்பட்டுள்ளது.*


*இது இயற்கை விதிகளுக்கு எதிரானது. இதன் காரணமாக முறையாக பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதால் மாணவர் சமுதாயமும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு  தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் பிப்ரவரி 11ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, புதிதாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி  அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.*

செவ்வாய், 9 மார்ச், 2021

*🌻அரசாணைகள் எண்: 86 முதல் 92, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு...*

*🌻அரசாணைகள் எண்: 86 முதல் 92, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு...*
G.O.Ms.Nos.86 to 92, Dated: 26-02-2021 - Revised Pay Scale as per the Recommendations of the One Man Committee -Orders Issued...

*🌻அரசாணைகள் எண்: 76 முதல் 85, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு..*

*🌻அரசாணைகள் எண்: 76 முதல் 85, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு..*

G.O.Ms.Nos.76 to 85, Dated: 26-02-2021 - Revised Pay Scale as per the Recommendations of the One Man Committee -Orders Issued...

*🌻அரசாணைகள் எண்: 68 முதல் 75 (74 தவிர), நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு...*

*🌻அரசாணைகள் எண்: 68 முதல் 75 (74 தவிர), நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு...*
G.O.Ms.Nos.68 to 75 (Except 74) , Dated: 26-02-2021 - Revised Pay Scale as per the Recommendations of  One Man Committee -Orders Issued...

Click here to Download G.O.Ms.Nos.68 to 75 (Except 74) , Dated: 26-02-2021...

*🌻அரசாணைகள் எண்: 58 முதல் 67 & 74, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு...*

*🌻அரசாணைகள் எண்: 58 முதல் 67 & 74, நாள்: 26-02-2021 - ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு...*
G.O.Ms.Nos.58 to 67 & 74 , Dated: 26-02-2021 - Revised Pay Scale as per the Recommendations of the One Man Committee -Orders Issued...

*🌻40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் தேங்கி நிற்கும் ஊழியர்களுக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு [முன்பு 30 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது]*

*🌻40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் தேங்கி நிற்கும் ஊழியர்களுக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு [முன்பு 30 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது]*

G.O.No.90/26.02.2021 இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணை வெளியீடு.

G.O-90- இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.