புதன், 10 மார்ச், 2021

*😷தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கவச உடை (PPE) - ஏற்பாடு செய்கிறது தேர்தல் ஆணையம்...*

*😷தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கவச உடை (PPE) - ஏற்பாடு செய்கிறது தேர்தல் ஆணையம்...*


 *சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பி.பி.இ., உடை (முழு கவச உடை), வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை வழங்க, தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.*

*சட்டசபை தேர்தல் நடத்துவதால், 'கொரோனா' தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக, தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. வாக்காளர் அனைவருக்கும் சானிடைசர் வழங்கவும், வலது கையுறை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

 
*இதுகுறித்து, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் ராஜாமணி நேற்று கூறியதாவது: நம் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 4,427 ஓட்டுச்சாவடிகளில், 22,150 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். இவர்கள், 'கொரோனா' தடுப்புக்கான பி.பி.இ., உடை அணிந்து, பணியில் ஈடுபடுவர். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இருப்பர். இவர்கள், தற்போது வீடு வீடாக, தபால் ஓட்டுச்சீட்டுக்கான படிவங்களை வினியோகிக்கின்றனர்.*


 
*தேர்தல் நாளன்று, அதே ஓட்டுச்சாவடியில் பணியில் இருப்பர். மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துச் செல்ல, தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர்.ஓட்டளிக்க வரும் அனைவருக்கும், 'தெர்மல் ஸ்கேனிங்' செய்யவும், சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்யவும், கையுறை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கையுறை அணிந்த பிறகே, ஓட்டு இயந்திர பொத்தானை அழுத்த, வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவர்.*

 
*ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும், பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட முக கவசம், பி.பி.இ., உடை, கையுறை ஆகியவற்றை ஓட்டுச்சாவடி வாரியாக வாகனங்களில் சென்று சேகரித்து, உரிய முறையில் அழிக்கவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக