செவ்வாய், 14 டிசம்பர், 2021

ஆதிதிராவிடர் நலத்துறை - கல்வி- பொது மாறுதல் கலந்தாய்வு கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த அரசாணை வெளியீடு


 Click here for download pdf

Samagra shiksha - sanction of maternity leave to temporary woman staffs - consolidated guidelines issued regarding




 

கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டிப்பு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு






 

வங்கிகளை சூறையாடுவதா? வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021க்கு எதிர்ப்புத் தெரிவித்து, டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 நாள் அகில இந்திய அளவில் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 

 வங்கிகளை சூறையாடுவதா? வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021க்கு எதிர்ப்புத் தெரிவித்து, டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 நாள் அகில இந்திய அளவில் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. யெஸ் வங்கி மற்றும் ஐஎல்&எஃப்எஸ் போன்ற நலிவடைந்த நிதி நிறுவனங்களை மீட்பதற்கு வங்கிகள் பயன்படுத்தப்பட்டா லும், 13 கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பாக்கி காரணமாக பொதுத்துறை வங்கிகள் கிட்டத்தட்ட ரூ.2.85 லட்சம் கோடியை இழந்துள்ளன என்று தேசிய வங்கிகள் கூட்டமைப்பு (யுபிஎஃப்யு) குற்றம் சாட்டியுள்ளது. தேசிய வங்கிகள் கூட்டமைப்பு அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 13 நிறு வனங்களின் நிலுவைத் தொகை ரூ.2,84,980 கோடி உள்ளது. குளோபல் டிரஸ்ட் பேங்க், யுனைடெட் வெஸ்டர்ன் பேங்க், பேங்க் ஆஃப் கராட் போன்ற நலிவடைந்த தனியார் துறை வங்கி களை மீட்டெடுக்க பொதுத்துறை வங்கிகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன என்பது நிதர்சனமான உண்மை. தனியார் துறையின் மிகப்பெரிய என்பிஎப்சி, ஐஎல்&எப்எஸ், எஸ்பிஐ மற்றும் எல்ஐசி மூலம் மீண்டும் மீட்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டம், வேலையில்லாத இளைஞர்களுக்கான முத்ரா, தெருவோர வியாபாரிகளுக்கான ஸ்வதான், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா போன்ற பெரும்பாலான அரசுத் திட்டங்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் சேவை தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது நாட்டின் சாமானிய மக்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளின் நலன்களை பாதிக்கும். வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர அரசு முன்வந்தால், தேச நலனுக்கும், அதன் நலனுக்கும் கேடு விளைவிக்கும். வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக காலவரை யற்ற வேலைநிறுத்தம் உட்பட எந்த எல்லைக்கும் செல்ல வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தயாராக உள்ளனர். பொதுத்துறை வங்கிகள் லாபத்தில் இயங்கினாலும் வங்கிகள் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை (Non-Performing Asset) பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சொத்துக்கள் தான். இதில் பெரும் பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சொந்தமானது என்கிறது தேசிய வங்கிகள் கூட்டமைப்பு.


திங்கள், 13 டிசம்பர், 2021

2021-2022 ம் கல்வி ஆண்டு - பள்ளி அளவி்ல் குழந்தைகளின் பாதுகாப்பு - இரண்டாம் கட்ட நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து SPD Proceedings


 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் முழு அதிகாரமும்- முழு உரிமையும் நிறைந்த தலைமை அமைப்பாம்‌ மாநிலப் பொதுக்குழு 26.12.2021 அன்று திருவாரூரில் கூடுகிறது!!

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் முழு அதிகாரமும்- முழு உரிமையும் நிறைந்த தலைமை அமைப்பாம்‌ மாநிலப் பொதுக்குழு 26.12.2021 அன்று திருவாரூரில் கூடுகிறது! நீதிநெறிவழுவா மனுநீதிச் சோழர் மண்ணில் , முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் இந்தி எதிர்ப்புப்போர் தொடங்கிய மண்ணில், ஆசிரியர் இனக்காவலர்- பாவலர் ஐயா அவர்களின் புகழுடல் வாழும் மண்ணில் ஒன்று கூடுங்கள்!!


ஆசிரியர் பணிப்பாதுகாப்புச்சட்டம் இயற்றப்படல் வேண்டும்! நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்புப்போராட்டம்! பள்ளிக்கல்வித்துறை அரசுமுதன்மைச் செயலாளரின் தலையீடும்,விரைவு நடவடிக்கைகளும் ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது!


 

IAS அதிகாரிகள் பணியிடம் மாற்றம் ! வருவாய் நிருவாக ஆணையராக திரு. சித்திக் அவர்கள் நியமனம்!


 

நாடு முழுதும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக சர்ச்சைக்குரிய வினாக்கள் நீக்கம்- சிபிஎஸ்இ.


 

சனி, 11 டிசம்பர், 2021

தேசியக் கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அக்கல்வி கொள்கையை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு மூலம் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது

 தேசியக் கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அக்கல்வி கொள்கையை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு மூலம் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசின் இத்தகையை நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எந்தவித சனநாயகப் பண்பையும், மக்களாட்சி நிறுவனங்களையும் மதிக்கத் தயாராக இல்லாத மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த விவாதமும் நடத்தாமல், தேசிய கல்விக்கொள்கை - 2020-யை, அரசின் கொள்கையாக 29.07.2020 அன்று அறிவித்திருந்தது. இக்கல்விக் கொள்கையை என்பது, மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிக்கிற, சமற்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்கிற, கல்வித்துறையில் தங்குதடையற்ற தனியார் கட்டணக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்துகிற, கல்வி உளவியலுக்கு முரணானது என்று அப்போதே தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டியிருந்தது. மேலும், மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய நீட் தேர்வு இருப்பதுபோல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு வைப்பது, அதற்கென தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில், தேசியத் தேர்வு ஆணையம் உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல் தேசிய கல்விக்கொள்கையில் இருப்பதை சுட்டிக்காட்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கல்வித் தொண்டர்கள் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். ஆட்களையும், அற நிறுவனங்கள், அரசுப் பங்கேற்பு என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களையும் திணிக்கும் மோசமான திட்டமும் இக்கல்வி கொள்கையில் இருக்கிறது என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020 - யை அமல்படுத்த ஒன்றிய அரசு தீவிர முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இதற்காக, பல்கலைக்கழக மானியக்குழு வாயிலாக, கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் ஒன்றிய அரசு சுற்றறிக்கைகள் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், தேசியக் கல்விக் கொள்கையின் பல பரிந்துரைகளை தனியார் பல்கலைக்கழகங்கள், சுய நிதிக் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சுற்றறிக்கையை, தமிழ்நாடு அரசோ, உயர்கல்வித் துறையோ, அரசு பல்கலைக்கழகங்களோ கண்டுகொள்ளாவிட்டாலும் கூட, தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கின்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. உயர் கல்வி நிலையங்களை சர்வதேசமயமாக்கும் போது இங்குள்ள பேராசிரியர்கள் தங்களின் பணியை இழக்க நேரிடும். கல்வி அதிகாரத்தை மாநிலங்களுக்குத் திரும்ப அளித்து, கல்வியாளர்களைக் கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழலுக்கேற்ப - கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை முடிவு. எனவே, தேசிய கல்விக்கொள்கையை பல்கலைக்கழகங்கள் அமல்படுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிடுவதோடு, சுயநிதிக் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள், தனியார் பல்கலைக் கழகங்களில் அமல்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.