புதன், 15 டிசம்பர், 2021
கோவிட் தடுப்பூசி குழந்தைகளுக்கு எப்போது?
கோவிட் தடுப்பூசி குழந்தைகளுக்கு எப்போது? 14 December 2021 தீக்கதிர் புதுதில்லி,டிச.14- கொரோனாவின் ஒமைக்ரான் வகை திரிபு பல நாடுகளில் வேகமாக பரவுகிறது. குறிப்பாக பிரிட்டன் போன்ற நாடுகளில் இதன் தாக்கம் தற்சமயம் அதிகம் உள்ளது. இருப்பினும் ஒமைக்ரான் திரிபானது குறைவான அளவே பாதிப்பை ஏற்படுத்துவதாக அறிவியலாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஒமைக்ரான் போன்ற புதிய புதிய திரிபுகளிலி ருந்து மக்களை காக்க, பிரிட்டன் உட்பட சில நாடுகளின் அரசுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கான கொரோ னா தடுப்பூசி அமலாக்கத்தை நோக்கி நகர்கிறது. ஒமைக்ரான் உட்பட இதுவரை பரவிய எல்லா வகை கொரோனா திரிபுகளுமே, தடுப்பூசிக்கு மிகப்பெரிய அளவில் கட்டுப்படுவது நிரூபிக்கப் பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் சிறிய வர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவ ருக்கும் தடுப்பூசியை கொண்டு செல்ல வேண்டும் என்று அரசு முனைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய மக்கள் தொகையில் தடுப்பூசி பெற தகுதியுடையவர்க ளில் (18 வயதுக்கு மேற்பட்டோர்) சுமார் 50% பேர் இரு டோஸ் தடுப்பூசியும்; கிட்டத்தட்ட 90% முதல் டோஸ் தடுப்பூசியும் பெற்றுள்ளனர் என ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்னாள் இணைச் செயலாளர் ராகேஷ் குமார் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். “ஹர் கர் தஸ்தக்” என்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசுத் தரப்பிலிருந்து ‘இந்தியாவில் பூஸ்டர் டோஸ் பயன்பாடு’ குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கு முன்ன தாக குழந்தைகளுக்கான தடுப்பூசியை அமலுக்கு கொண்டுவரவே அரசு வேகமாக முனைந்து வருகிறது எனத் தெரிகிறது. தற்போது வரை, ஒன்றிய மருத்து கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்து ரையின் கீழ், 5 கொரோனா தடுப்பூசிகள் குழந்தை கள் மத்தியிலான ஆய்வுநிலையில் உள்ளன. கேடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் சைகோவ் டி இந்த தடுப்பூசி 12 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மூன்றாம் கட்ட ஆய்வில் உள்ளது. இருப்பினும் அவசர கால ஒப்புதலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களில் பொது சோதனைக்கு வந்துள்ளது. கோவாக்சின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக் சின்’ தடுப்பூசியை, 12 வயதுக்குக் கீழ் உள்ள (2-18 வயது)குழந்தைகளுக்கு செலுத்த ஆய்வு நடந்துவருகிறது. இரண்டாம் / மூன்றாம் கட்ட நிலையில் இந்த ஆய்வுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அவசரகாலப் பயன்பாட்டுக்கு இதை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம் என இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும் அதற்கு இன்னும் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்கவில்லை. சீரம் நிறுவனத்தின் கோவாவாக்ஸ் 2 - 17 வயதுடைய குழந்தைகள் மத்தியில் இந்த மருந்துக்கான ஆய்வு நடக்கிறது. இதற்கும், இரண்டாம்/மூன்றாம் கட்ட நிலையில் ஆய்வுகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 920 பேர் மத்தியில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பயோலாஜாக்கில்-இ நிறுவனத்தின் ஆர்.பி.டி தடுப்பூசி 5 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதன் ஆய்வும் இரண்டாம்/மூன்றாம் கட்ட நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 624 பேர் மத்தியில் இந்த ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஏடி.2எஸ் தடுப்பூசி இது, 12 - 17 வயதுக்குட்பட்ட பதின் பருவ குழந்தைகள் மத்தியில் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இரண்டாம் / மூன்றாம் கட்ட நிலையில் ஆய்வுகள் உள்ளன. 920 பேர் மத்தியில் இந்த ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. ஐந்து தடுப்பூசிகளிலும், ஒவ்வொன்றும் 2 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்குமே தடுப்பூசி கிடைக்கும் வகையில் வெவ்வேறு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத்தகவல்களை,நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கூறியிருந்தார். உலகளவில் அமெரிக்கா, கிரீஸ், இத்தாலி, இந்தோனேஷியா, ஸ்பெயின், சுவீடன், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, அர்ஜென்டி னா, கியூபா, கொலம்பியா, ரஷ்யா, நார்வே, பஹ்ரைன், இஸ்ரேல், சவூதி அரேபியா உட்பட பல நாடுகள் குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு நாடும், வெவ்வேறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தருகிறது. உதாரணத்துக்கு, இந்தோனேஷியா 6- 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு; கனடா 12 - 17 வயதுக்குட்பட்டோருக்கு; அமெரிக்கா 5 - 18 வயதுக்குட்பட்டோருக்கு என தடுப்பூசி வழங்கி வருகிறது. அந்தந்த நாடுகள் செய்த ஆய்வின்படி வயது நிர்ணயிக்கப்படுகிறது. தடுப்பூசி தினம் வயது மட்டுமன்றி குழந்தைகளின் உடல்நல னும் கவனத்தில் கொள்ளப்பட்டு தடுப்பூசி போடப் படுவதாக சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு டென்மார்க்கில் தொற்றுக்கான சாத்தியமுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதுவே இத்தாலியில் “தடுப்பூசி யென்பது மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு அது இன்னும் எளி மையாக்கப்பட்டுள்ளது” எனக்கூறப்பட்டு Vax Day (தடுப்பூசி தினம்) என்ற பெயரில் தனி யொரு தினமே இன்று (டிச.15) கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகள் மத்தியில் உலக நாடுகள் தடுப்பூசி விநியோகத்தை அதிகரித்து வருவதன் விளைவாக கனடாவில், குழந்தைகளில் கிட்டத்தட்ட 7.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயினில் 12 வயதுக்கு மேற்பட்ட 90% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் இந்த எண்ணிக்கை யை உயர்த்தவும் வாய்ப்புள்ளதாக ஸ்பெயின் கூறுகிறது. இப்படி பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதை கருத்தில் கொண்டு, இந்தி யாவிலும் சிறார்களுக்கான தடுப்பூசி விநியோ கத்தை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குரூப் - 1' தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு #tnpsc2022exams #tnpscgroup1 'குரூப் -1' பதவிகளுக் கான முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட் டுள்ளன
'குரூப் - 1' தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு #tnpsc2022exams #tnpscgroup1 'குரூப் -1' பதவிகளுக் கான முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட் டுள்ளன. தமிழக அரசு துறை களில் காலியாக உள்ள துணை கலெக்டர், டி.எஸ். பி., வணிக வரி உதவி கமி ஷனர், கூட்டுறவு துறை துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக் குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அதிகாரி ஆகிய பதவிகளில், 66 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, அரசு பணி யாளர் தேர்வாணையம் சார்பில், இந்த ஆண்டு ஜனவரி 3ல் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்பட்தேர்வு டது. இதில் 1.31 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர் வுக்கான விடைத்தாள் திருத்தம் முடிந்து, பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றவர் களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 3,800 பேர் பிரதான தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். 'இவர்களுக்கு மார்ச் முதல் 6 வரை பிரதான நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா தெரிவித் துள்ளார்.
செவ்வாய், 14 டிசம்பர், 2021
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு.
➥டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு.
➥மார்ச் மாதம் (2022) 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
➥சமீபத்தில் நிறைவு பெற்ற முதல்நிலைத் தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
➥மொத்த கலிப்பணியிடம் : 68.
வங்கிகளை சூறையாடுவதா? வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021க்கு எதிர்ப்புத் தெரிவித்து, டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 நாள் அகில இந்திய அளவில் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
வங்கிகளை சூறையாடுவதா? வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021க்கு எதிர்ப்புத் தெரிவித்து, டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 நாள் அகில இந்திய அளவில் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. யெஸ் வங்கி மற்றும் ஐஎல்&எஃப்எஸ் போன்ற நலிவடைந்த நிதி நிறுவனங்களை மீட்பதற்கு வங்கிகள் பயன்படுத்தப்பட்டா லும், 13 கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பாக்கி காரணமாக பொதுத்துறை வங்கிகள் கிட்டத்தட்ட ரூ.2.85 லட்சம் கோடியை இழந்துள்ளன என்று தேசிய வங்கிகள் கூட்டமைப்பு (யுபிஎஃப்யு) குற்றம் சாட்டியுள்ளது. தேசிய வங்கிகள் கூட்டமைப்பு அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 13 நிறு வனங்களின் நிலுவைத் தொகை ரூ.2,84,980 கோடி உள்ளது. குளோபல் டிரஸ்ட் பேங்க், யுனைடெட் வெஸ்டர்ன் பேங்க், பேங்க் ஆஃப் கராட் போன்ற நலிவடைந்த தனியார் துறை வங்கி களை மீட்டெடுக்க பொதுத்துறை வங்கிகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன என்பது நிதர்சனமான உண்மை. தனியார் துறையின் மிகப்பெரிய என்பிஎப்சி, ஐஎல்&எப்எஸ், எஸ்பிஐ மற்றும் எல்ஐசி மூலம் மீண்டும் மீட்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டம், வேலையில்லாத இளைஞர்களுக்கான முத்ரா, தெருவோர வியாபாரிகளுக்கான ஸ்வதான், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா போன்ற பெரும்பாலான அரசுத் திட்டங்களுக்கு பொதுத்துறை வங்கிகளின் சேவை தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது நாட்டின் சாமானிய மக்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளின் நலன்களை பாதிக்கும். வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர அரசு முன்வந்தால், தேச நலனுக்கும், அதன் நலனுக்கும் கேடு விளைவிக்கும். வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக காலவரை யற்ற வேலைநிறுத்தம் உட்பட எந்த எல்லைக்கும் செல்ல வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தயாராக உள்ளனர். பொதுத்துறை வங்கிகள் லாபத்தில் இயங்கினாலும் வங்கிகள் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை (Non-Performing Asset) பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சொத்துக்கள் தான். இதில் பெரும் பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சொந்தமானது என்கிறது தேசிய வங்கிகள் கூட்டமைப்பு.