திங்கள், 1 மே, 2023

நீட் தேர்வு 2023 - முக்கிய அறிவிப்பு வெளியீடு

 நீட் தேர்வு 2023 - மாணவர்கள் தேர்வு எழுதவிருக்கும் நகரங்களின் (Examination City) விவரம் வெளியீடு.


CLICK HERE

ஆசிரியர் பொதுமாறுதல் தொடர்பாக EMISல் வெளியிடப்பட்டுள்ள புதிய தகவல்...

 


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் எருமப்பட்டியில் மே தின கொடியேற்று விழா

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் எருமப்பட்டியில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஒன்றியத் தலைவர் ரெ.கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர் மன்றக் கொடி ஏற்றினார்.




மாவட்டத் துணைச் செயலாளர்நீ.கனகலிங்கம், ஒன்றியச் செயலாளர் இரா.செல்வராசு, ஒன்றிய துணைச் செயலாளர் பா.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று மேதின வணக்கம் செலுத்தினர்.




#எருமப்பட்டி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் சீராப்பள்ளியில் (நாமகிரிப்பேட்டை) மே தின கொடியேற்று விழா

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் சீராப்பள்ளியில் (நாமகிரிப்பேட்டை) மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.




இந்நிகழ்விற்கு ஒன்றிய தலைவர் எம்.கே.முருகேசன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் சி.மோகன் குமார் வரவேற்புரை ஆற்றினார்.

மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

மாநிலச் சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் பெ.பழனிசாமி ஆசிரியர் மன்றக் கொடி ஏற்றினார்.

க கிருஷ்ணன் ஒன்றிய பொருளாளர், து.வெங்கடேஷ் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர், ப.சந்திரன் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.





தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நாமக்கல்லில் மே தின கொடியேற்று விழா

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நாமக்கல்லில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.


நாமக்கல் பிரதான சாலை பலபட்டறை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயலாளர் திரு.செந்தில்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமதிகோ.கு. ராஜேஸ்வரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கொடியினை ஏற்றி வைத்தார். ஒன்றிய தலைவர் திரு தா. பெ. கண்ணன் முன்னிலை வகித்தார். 



மாநிலப் பொருளாளர் திரு.முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மே தினத்தின் முக்கியத்துவம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயல்பாடுகள், மே தின வரலாறு குறித்து விளக்கம் அளித்து பேசினார். 

முன்னதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட தலைவர் திரு அ. ஜெயக்குமார் தொடக்க உரையாற்றி பேசினார். 

மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு.தண்டபாணி, மகளிர் அணி அமைப்பாளர் திருமதி கௌரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர். 

அப்போது, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில், மே தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்புகள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.செல்வராணி, திருமதி.வெண்ணிலா, திருமதி.கிருத்திகா உள்பட பலரும் கலந்துகொண்டனர். 


நிறைவாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமதி.ஜீவா ஜாய் நன்றி தெரிவித்தார். 

----------------------------------------

மே 1~ தொழிலாளர் தின வாழ்த்துக்கள்...