வெள்ளி, 8 டிசம்பர், 2017

ஏடிஸ் கொசுப்புழு இல்லை என வியாழன் தோறும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்ப வேண்டிய வாரந்திர சான்று...

JACTTO-GEO அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு...



கோரிக்கைகள் :

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்தல்,

இடைநிலை & முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைதல்,

போராட்ட பாதை :

21.12.2017 வியாழன் அன்று,

மாவட்டத் தலைமை நீதிபதிகளிடத்திலும்

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி / பதிவாளரிடத்திலும்

முறையீட்டு மனு அளித்தல்
______________________________________

30.12.2017-ற்குள் தமிழக அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில்,

31.12.2017 ஞாயிறு அன்று திருச்சியில்
உரிமைப் போராட்டங்களில் நீதிமன்றங்களின் தொடர் தலையீடுகள் குறித்தும், தொடர் இயக்க நடவடிக்கை குறித்தும்,

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து,
கருத்தரங்கு நடத்துதல்

____________________________________

சனவரி 4-வது வாரத்தில் இருந்து,
சென்னையில்
காலவரையற்ற தொடர் மறியலில் ஈடுபடுதல்

அன்பானவர்களே! வணக்கம்.

எருமப்பட்டி ஒன்றிய உதவித்தொடக்கக்
கல்வி அலுவலரும்,
அலுவலக நிர்வாகமும் ஒன்றிய ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத பழைய/புதிய ஊதியத்தினையும்,
புதிய ஊதிய மாற்றத்திற்கான அக்டோபர் மாத ஊதிய நிலுவை ஊதியத்தினையும் இதுவரையிலும்(டிசம்பர்8)பெற்று வழங்கிடாத மெத்தனப்போக்கினை கண்டித்தும், உடனடியாக பெற்று வழங்கிட வலியுறுத்தியும்,அலுவலகப் பணியாளர்களின் குழுவாதப்போக்கிற்கு உடனடி தீர்வு காணும் வகையினில் அலுவலகப்பணியாளர்களை  ஒட்டுமொத்தமாக நிர்வாக இடமாறுதல் செய்திட வற்புறுத்தியும்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளராகிய நான் (முருகசெல்வராசன்)வரும் 11.12.2017(திங்கள்)முற்பகல் 09.30மணியிலிருந்து எருமப்பட்டி உதவித்தொடக்கக்
கல்வி அலுவலகம் முன் தனிநபர் சத்தியாகிரகம் மேற்கொள்கிறேன்.

பொதுநலனில் ஆர்வமுடையோர் ஆதரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
~முருகசெல்வராசன்.

தொடக்கக்கல்வித் துறையில் 1-8 வகுப்பு கற்பிக்கப்படும் பாடங்களில் பட்டம் பெற்றால் மட்டும் இனி ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும் தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தலைவரும்,நாமக்கல் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளருமான திரு.சு.சிதம்பரம் அவர்கள் இராசீபுரம் வட்டத்தின் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப்படி பெற்று பயன்பெறும் வகையில் பெற்றுள்ள தகவல்களின் விபரம்...

Epayslip site...

'ஸ்காலர்ஷிப்' தேர்வுகளுக்கு அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி...


மத்திய, மாநில அரசு களின், கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான, திறனறி தேர்வுகளில் தேர்ச்சி பெற, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் ஆகிறது. நான்கு லட்சம் மாணவர்களுக்கு, 3,500 மையங்களில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க, திறனறி தேர்வுகள் நடத்தப் படுகின்றன. தேசிய அளவில் நடக்கும் இந்த தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். இந்த நிலைமையை மாற்ற, தமிழக அரசின் சார்பில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, 7,219 நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், நான்கு லட்சம் மாணவர்களுக்கு, திறனறி தேர்வுக்கு பயிற்சி தரப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு, 2.93 கோடி ரூபாய் ஒதுக்கி, முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார். திட்டத்தை அமல்படுத்தும் பணிகளை துவங்குமாறு, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும், போட்டி தேர்வு பயிற்சிக்கு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, 500 மையங்களும், தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்படும், 3,000, 'ஸ்மார்ட்' வகுப்புகளும், திறனறி தேர்வு பயிற்சி மையங்களாக செயல்பட உள்ளன.
இதற்காக, தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இந்த திட்டம், விரைவில் அமலுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புது முயற்சி : திறனறி தேர்வுக்கான இலவச பயிற்சி, இணையதளத்தில், 'யூ டியூப் லிங்க்' வழியாகவும் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தொடக்க கல்வித்துறை சார்பில், புதிய இணையதளம் துவங்கப்பட உள்ளது. அதில், முந்தைய தேர்வுகளின் வினாத்தொகுப்புகள், விடைக்குறிப்புகள் இடம்பெறும். 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், திறனறி தேர்வுக்கான கையேடுகள் வழங்கப்படும். திறன் தேர்வில் அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு, இலவச பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியை, தொடக்க கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் பணி நாட்களின் எண்ணிக்கையை மாற்றியமைத்தல் ஆணை!

புது பாடத்திட்டத்தில் கலாம், நம்மாழ்வார் ,கூகுள் சுந்தர் பிச்சை...

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: YouTube நிறுவனம்!

யூடியூப்பில் ஏற்படும் வன்முறையை பிரச்சினைகளைக்  கட்டுப்படுத்துவதற்காக 10,000 நபர்களைப் பணியில் சோ்க்க உள்ளது.



கூகுள் நிறுவனத்தின் வீடியோ பிரிவு சிறப்பு ஊழியரான சூசன், பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில், சிலர் யூடியூபை தவறாக வழிநடத்துதல், கையாளல், தொந்தரவு அல்லது தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
எனவே 2018-ம் ஆண்டில் வீடியோவில் வரும் தவறாக வழிநடத்துதல் பிரச்சினைகளை களைவதற்கு 10,000 நபர்களைப் பணியில் அமா்த்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.
யூடியூப் மட்டும் இல்லாமல் பேஸ்புக், கூகுள், போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் வன்முறை பிரசாரம் போன்ற தேவையற்ற பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் குழந்தைகளுக்காகவே யூடியூப் கிட்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் கிட்ஸ் மூலமாக 37 நாடுகளில் மட்டும் 800 மில்லியன் வீடியோ பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.