வியாழன், 15 மார்ச், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதிய ஒன்றியக்கிளைகள்(சேலம்) தொடக்கவிழா~அழைப்பிதழ்...


அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ,பாவலர் அய்யா அவர்கள்  17.03.18 அன்று பிற்பகல் 02.00மணியளவில் சேலத்தில் நடைபெறும்  சங்ககிரி,காடையாம்பட்டி மற்றும் அயோத்தியாப்பட்டிணம் ஆகிய மூன்று புதிய ஒன்றியக்கிளைகளின் தொடக்கவிழாவில் பங்கேற்கிறார்.

இவ்விழா நிறைவிற்கு பின் நாமக்கல் பயணமாகிறார்கள்.

17.03.18(சனி)அன்று பிற்பகல் 08.00மணியளவில் நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ள சனு ஓட்டலில் தங்குவதற்கு சேந்தமங்கலம் ஒன்றியக்கிளை அறை ஏற்பாடு செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் பொறுப்பாளர்கள்,
ஆசிரியப்பெருமக்கள்  விரும்பின் சனி பிற்பகல் 09.30மணிமுதல் 09.30மணிவரையிலும்,18.03.18(ஞாயிறு) முற்பகல் 08.30மணிமுதல் 09.30மணிவரையிலும்  சந்திக்கலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
                       நன்றி.
           ~முருகசெல்வராசன்.

01.01.2018-ஐ அடிப்படையாக கொண்டு பதவி வாரியாக பணிமூப்புப்பட்டியல் மற்றும் பதவி உயர்விற்கான தேர்ந்தப்பட்டியல்கள் ஆகியவை நாமக்கல் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரின் ஏற்புப்பெற்று தங்களது ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டு உள்ளதா?என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்...

அன்பானவர்களே!வணக்கம்.

01.01.2018-ஐ அடிப்படையாகக்கொண்டு
 பதவி வாரியாக பணிமூப்புப்பட்டியல் மற்றும் பதவி உயர்விற்கான தேர்ந்தப்பட்டியல்கள் ஆகியவை நாமக்கல் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலரின் ஏற்புப்பெற்று 
 தங்களது ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டு உள்ளதா?என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இப்பட்டியல்கள் ஒன்றியத்தின் அனைத்துவகை  ஆசிரியர்களின் மேலான பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டும்,நகல்கள் தரப்பட்டும் 
ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளதா?என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் இப்பட்டியல்களின் நகல்களை  கேட்டுப்பெற்று பள்ளியின் இருப்புக்கோப்பில் வைத்துக்கொள்ளுமாறு அனைத்தாசிரியர்களுக்கும் எடுத்துரையுங்கள்.

ஒன்றியச்செயலாளர்கள் மேற்கண்ட
அலுவலரிடம் 
நகல் பெற்று இருப்புக்கோப்பில் வைத்திடுங்கள்.

இப்பணிகள் சார்ந்து கவனம் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.                         நன்றி.
          ~முருகசெல்வராசன்

தங்களது ஒன்றியத்தில் பதவிஉயர்வின் வழியில் நிரப்பிடத்தக்க காலிப்பணியிடங்கள் ஏதும் இருப்பின் 31.03.18க்குள் 01.01. 2017-ஐ அடிப்படையாகக்கொண்டு நிரப்பிடுமாறு ஒன்றிய உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஆசிரியர் மன்றத்தின் சார்பில் கோரிக்கை விண்ணப்பம் அளித்திடுங்கள்...

அன்பானவர்களே!வணக்கம்.

தங்களது ஒன்றியத்தில் பதவிஉயர்வின் வழியில் நிரப்பிடத்தக்க காலிப்பணியிடங்கள் ஏதும் இருப்பின் 31.03.18க்குள்01.01. 2017-ஐ அடிப்படையாகக்கொண்டு நிரப்பிடுமாறு ஒன்றிய உதவித்தொடக்கக்
கல்வி அலுவலரிடம் ஆசிரியர்  மன்றத்தின் சார்பில் கோரிக்கை விண்ணப்பம்
அளித்திடுங்கள்.

இப்பொருள் சார்ந்தும்,கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ள விபரம் சார்ந்தும் 
மாவட்டச்செயலாளருக்கும் நகலிட்டு  தெரிவித்து
விடுங்கள்.
                     நன்றி.
            ~முருகசெல்வராசன்

மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு சார்பான அறிவுரைகள் ~தருமபுரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்....

புதன், 14 மார்ச், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ சேந்தமங்கலம் ஒன்றியத் தலைவர் பணிநிறைவு பாராட்டு விழா ~ அழைப்பிதழ்....

ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு காலவரையற்று நீட்டிப்பு-உச்ச நீதிமன்றம்...

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு அரசாங்கம் மூலம் கடன் பெறுவதற்கான கருத்துருக்கள் , படிவங்கள் மற்றும் வழி முறைகள்...

தர்மபுரி அரூர் கல்வி மாவட்டம் உதயமானது! அரசாணை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ~எருமப்பட்டி ஒன்றியத் தேர்தல்-2018~நிகழ்வுகள் (13-03-18)...

தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்படும் என்று கூறிய எச்.ராஜா வை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (12.03.2018)~நாளிதழ் செய்திகளில்....