*🌷அக்டோபர் 8, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------
*1.✈விமானப்படை தினம்.*
*2.மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுதினம்*
*3.ஜெயபிரகாஷ் நாராயண் நினைவு தினம் இன்று.*
*4.இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என். ராமச்சந்திரன் பிறந்த தினம்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------
*✈ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.*
*இந்திய விமானப் படையானது 1932இல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று, இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் இருந்த சமயத்தில் உருவாக்கப்பட்டது.*
-----------------------------------------------
*🎼மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம் இன்று.*
*பாமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கருத்துகளை சொன்ன ஒரே கவிஞர்.*
*மக்களின் கவிஞன் என்ற பட்டத்திற்கு முற்றிலும் தகுதியானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.*
*29 வருடங்களே இப்பூமியில் வாழ்ந்தவர்.* *ஆனால் இந்த பூமி உள்ள மட்டும் அழியா பாடல்கள் தந்தவர்.!*
*விவசாயி, மாடு மேய்ப்பவன், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரம், முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடி தொழில், உப்பளத் தொழில், மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டி ஓட்டுநர், அரசியல் பிரச்சாரகர், பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் இப்படி 17 தொழில்கள் புரிந்தவர்.! அந்த பாட்டாளிகளுக்கான மக்கள் கவிஞரை இன்று நினைவு கூர்வோம்.*
----------------------------------------------
*🌷ஜெயபிரகாஷ் நாராயண் நினைவு தினம் இன்று.*
*ஜெயபிரகாஷ் நாராயண் (அக்டோபர்*
*11 , 1902 - அக்டோபர் 8, 1979), பரவலாக JP என*
*அறியப்பட்டவர், இந்திய விடுதலை*
*இயக்கத்தில் பங்காற்றிய விடுதலை வீரர்*
*மற்றும் 1970களில் இந்திரா காந்தியை*
*எதிர்த்து போராடிய அரசியல் தலைவர்.*
*தமது அமைதியான முழு* *புரட்சி(Total*
*Revolution) என்ற* *முழக்கத்திற்காக பரவலாக*
*அறியப்பட்ட சோசலிசவாதி. 1977ஆம் ஆண்டு*
*உருவான ஜனதா கட்சி* *அரசுக்கு*
*வித்திட்டவர்.1998ஆம்* *ஆண்டு, அவரது*
*மறைவிற்கு பிறகு, அவராற்றிய சமூகப்*
*பணிக்காக பாரத ரத்னா* *விருது*
*வழங்கப்பட்டது.1965ஆம்* *ஆண்டு அவரது*
*பொதுச்சேவைக்காக* *மக்சேசே பரிசு*
*வழங்கப்பட்டது.*
----------------------------------------------
*🌷இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என். ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று.*
*கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் (1922). இவரது முழுப் பெயர், கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன். 1939இல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் முதலில் மின் பொறியியல் துறையில் சேர்ந்தார்.*
*ஆனால், விரைவில் தனது இயற்பியல் நாட்டத்தை உணர்ந்து கொண்டு இயற்பியல் துறையில் சேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து 1942இல் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய அறிவியல் கழகத்தில் சர்.சி.வி. ராமனின் கீழ் ஆய்வு மேற்கொண்டு 1947இல் டி.எஸ்சி. பட்டம் பெற்றார். பிறகு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றார்.*
*இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இவருக்கு ஆராய்ச்சியாளராக பணிபுரியும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவிலேயே பணிபுரிய விரும்பினார். 1952இல் இந்திய அறிவியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1952இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.*
*இந்தத் துறையின் கீழ் கிரிஸ்டலோகிராஃபி மற்றும் பயோபிசிக்ஸ் என்ற புதிய துறையை நவீன ஆய்வு வசதிகளுடன் சர்வதேசத் தரத்துடன் உருவாக்கினார். இது நாட்டின் தலைசிறந்த ஆய்வுநிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தசைநார் புரதத்தில் சவ்வு என்ற முக்கோண அமைப்பைப் பற்றி ஆய்வறிக்கை வெளியிட்டார். எக்ஸ்-கதிர் படிகவியல், கூடுதல் ஆப்டிகல் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.*
*இந்த ஆய்வுகள் எக்ஸ்-ரே துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது பெப்டைட் தொகுப்புகள் குறித்த ஆராய்ச்சிகள், புரதக் கூறுகளின் வடிவமைப்பைப் புரிந்துகொள்ள பயன்பட்டது. இது ‘ராமச்சந்திரன் பிளாட்’ என்று குறிப்பிடப்பட்டது.*
*மூலக்கூறு உயிரி இயற்பியலில் புரதங்களின் கட்டமைப்புப் பற்றிய தசைநார்ப் புரதத்தின் மும்மடங்கு எழுச்சுருள் வடிவம் (triple-helical model for structure of collagen) என்ற இவரது கண்டுபிடிப்பு புரதக்கூறுகளின் வடிவமைப்பின் அடிப்படைகளை அறிந்துகொள்ள உதவியத