புதன், 22 ஜூன், 2022
எருமப்பட்டியில் பணியாற்றி நாமக்கல்லில் பணியாற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.சந்திரவதனா மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்! ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கான அனைத்து வகை முகாந்திரங்களும் உள்ளநிலையில் இவ்வலுவலரை காப்பாற்றுவது கல்வித்துறைக்கு செய்யப்படும் துரோகம் ஆகாதா?! கல்வித்துறைக்கு துரோகம் செய்யத்தான் கல்வித்துறை அலுவலர்களா?!கல்வித்துறை பணியாளர்களா?! ஆசிரியர் என்றால் அம்பாய் பாய்வதும், அலுவலர் என்றால் வில்லாய் வளைந்து , நெளிந்து,குழைந்து இணைந்து நிற்பதும் மனித நாகரீகம் ஆகாது!
வேலைநிறுத்தக் காலத்தில் அரசு தண்டனைக் கொடுக்கிறது ஒரு இரகம்! நாமக்கல்லில் மட்டும் கல்வித்துறை அலுவலர்கள் இரகம்...இரகமாய்... தண்டனைத்தருவார்கள்! நாமக்கல்லில் சிஇஓ இடமாறுதல் தண்டனை தந்து சம்பளத்தையும் நிறுத்தி மகிழ்வாங்க!? அரசாணை சம்பளம் தந்துடுனு சொன்னாலும் பிஇஓ தராமல் மன உளைச்சல் தந்து மகிழ்வாங்க!? காலக்கோளாறுகள்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)