செவ்வாய், 16 ஜூன், 2026

தொடக்கக்கல்வி - நாமக்கல் மாவட்டம் - அனைத்து ஒன்றியங்களுக்கான DDO CODES

17 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்.

17 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்.

சேலம் எஸ்.பி. - குத்தாலிங்கம்

திருவண்ணாமலை எஸ்.பி. - கார்த்திகேயன், 

கடலூர் எஸ்.பி. - விவேகானந்த சுக்லா, 

திருவள்ளூர் எஸ்.பி. - சாய் பிரனீத், 

திண்டுக்கல் எஸ்.பி - ஜெயகுமார்,

விழுப்புரம் எஸ்.பி. - மதிவானன், 

விருதுநகர் எஸ்.பி. - விமலா

தர்மபுரி எஸ்.பி. - அருண் கபிலன்

கிருஷ்ணகிரி எஸ்.பி. - அனிதா

நாமக்கல் எஸ்.பி. - யாதவ் கிரிஷ் அசோக்

மதுரை எஸ்.பி. - தேவநாதன்

நாகை எஸ்.பி - கெல்கர் சுப்ரமன்ய பாலசந்த்ரா

தேனி எஸ்.பி - கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம்

நெல்லை எஸ்.பி. - விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்த்ரி

மயிலாடுதுறை எஸ்.பி. - புக்யா ஸ்னேக பிரியா

திருப்பூர் எஸ்.பி - ஷ்ரிஸ்டி சிங்

அரியலூர் எஸ்.பி - செல்வகுமார்

ஜூலை 4,5 ல் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்து முன்னேற்பாடுகள் குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூட்டம் 23.06.2026 ல் நடைபெற உள்ளது.

செய்தி வெளியீடு - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு

செய்தி வெளியீடு

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று விரிவாக்கம் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் குறைதீர் முகாம் /தொடக்கக்கல்வி இயக்கக்கத்தின் கட்டுபாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணி பணப்பலன்கள் சார்ந்த பணிகள் உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் நடத்துதல் - தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-06

ந.க.எண்:010536/டி1/2026, நாள்: .06.2026

பொருள்:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் குறைதீர் முகாம் /தொடக்கக்கல்வி இயக்கக்கத்தின் கட்டுபாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணி பணப்பலன்கள் சார்ந்த பணிகள் உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் நடத்துதல் - தொடர்பாக

திங்கள், 15 ஜூன், 2026

13.06.2026 திருச்செங்கோடு மலை அடிவாரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டச் செயற்குழு பற்றிய நாளிதழ் செய்திகள் தொகுப்பு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -தொடக்கக் கல்வி மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் -கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டம்- 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ஊக்கத் தொகையில் உள்ள இடையூறு நிவர்த்தி செய்தல் மற்றும் 2026-2027 ஆம் நிதியாண்டில் செம்மையாக செயல்படுத்துதல் குறித்து அறிவுரை வழங்குதல் தொடர்பாக.

கிராமப்புற பெண் குழந்தைகள் ஊக்கத்தொகை திட்டம் – அவசர அறிவிப்பு
🏫 2025-2026 கல்வியாண்டு
✅ EMIS-ல் ஆதார் எண் சரியாக பதிவிடப்படாத 7,834 மாணவியர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.
✅ NPCI Inactive நிலையில் உள்ள 10,132 மாணவியர்களின் வங்கி கணக்குகள் NPCI Active ஆக மாற்றப்பட வேண்டும்.
✅ மாணவியரின்:
ஆதார் எண்
ஆதார் சீடிங் (Aadhaar Seeding)
வங்கி கணக்கு விவரங்கள்
ஆகியவை EMIS-ல் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
⏰ கடைசி நாள் : 19.06.2026
⚠️ மேற்கண்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, ஊக்கத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🏢 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் 📅 13.06.2026





தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் ( கிளை) - மாவட்டச் செயற்குழு கூட்டம் 13.06.2026

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் - திருச்செங்கோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி மலையடிவாரம் பள்ளியில் 13.06.2026 சனிக்கிழமை நடைபெற்றது. 
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் திரு ஆ. ஜெயக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திரு.மெ. சங்கர் அவர்கள் செயல் அறிக்கை வாசித்தார் .மாவட்ட பொருளாளர் திரு சு.பிரபு அவர்கள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.மாநில பொருளாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் இயக்க உரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 9 ஜூன், 2026

2026-27ம் கல்வியாண்டிற்கு பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்விற்கான உத்தேச கால அட்டவணை

2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ..

மற்றும் 

2026-27ம் கல்வியாண்டிற்கு பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்விற்கான உத்தேச கால அட்டவணை