ஞாயிறு, 28 அக்டோபர், 2018

கியூஆர்.கோடு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி: விரைவில் அறிமுகம்

மொபைல் செயலி மூலம் கியூஆர்.கோடு ஸ்பேன் செய்து, ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த முறையில் பணம் எடுக்கும்போது, நமக்கு தேவையான வகையில், 2000, 500, 200, 100 என ரூபாய் நோட்டுக்களை எடுக்க முடியும்.

நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை ஊக்கப்பபடுத்தி வரும் மத்திய அரசு, தற்போது வங்கியின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்து. அதன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

தற்போது கியூஆர் கோடு உபயோகப்படுத்தி மொபைல் ரீசார்ஜ் போன்ற ஒரு பரிவர்த்தனைகள் நடைபெற்று வரும் நிலையில், ரயில் டிக்கெட் பதிவு செய்யவும் கிஆர் கோடு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கியூ ஆர் கோடு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரிசி அளவில் சிறிய கம்ப்யூட்டர் தயாரிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகிலேயே மிகச்சிறிய கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளனர். கடந்த 2014ல் முதல்முறையாக 2x2x4 மிமீ அளவிலான கம்ப்யூட்டரை கண்டுபிடித்திருந்தனர். அதற்கு ‘மைக்ரோ மோட்’ என்று பெயரிட்டிருந்தனர்.

இந்த மிகச்சிறிய கம்யூட்டர் முழுவதுமாக செயல்படக்கூடியதும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகும் தகவல்களைப் பெறக்கூடிய ஆற்றலும் கொண்டது. இந்நிலையில் ஐபிஎம் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒரே ஒரு உப்புக் கல்லை விட, மிகச்சிறிய சிப்பை உருவாக்கியது. இது 1 மிமீ நீளம் x 1 மிமீ அகலம் கொண்டது.




இந்த கம்ப்யூட்டர் 1990களில் உருவாக்கப்பட்ட சிபியு போன்ற செயல்திறன் கொண்டது. இந்த சூழலில் மிச்சிகன் பல்கலைக்கழகம் தற்போது 0.3 மிமீ x 0.3 மிமீ அளவிலான, ஒரேவொரு அரிசியை விட மிகச்சிறிய கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது.

டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்களில் மின் இணைப்பை துண்டித்து விட்டால், நாம் பயன்படுத்திக் கொண்டிருந்த செயல்பாடுகள் அனைத்தும் உள்ளடக்க மெமரியில் சேமித்து வைக்கப்படும். பின்னர் ஆன் செய்யும் போது, அனைத்து செயல்பாடுகளும் மீண்டும் செயல்படத் தொடங்கும்.

ஆனால் இத்தகைய மிகச்சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டிற்கு வருவது சாத்தியம் இல்லை. எனினும் இந்த சிறிய கம்ப்யூட்டர்கள் வெப்பநிலையை அறிய உதவும் சென்சார்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை எலக்ட்ரானிக் பல்ஸை, குறிப்பிட்ட கால இடைவெளியில் வெப்பநிலையாக மாற்றுகின்றன.

நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நாளை முதல் சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் எனத் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் சுந்தரம்மாள் தெரிவித்தார்.




"திங்கள்கிழமை(அக்டோபர் 29) முதல் சத்துணவு சமைக்க மாட்டோம். நாளை முதல் சத்துணவு கூடங்கள் காலவரையின்றி மூடப்படும். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார் சுந்தரம்மாள். இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது சத்துணவு ஊழியர் சங்கம்.

இணையவழி பட்டாமாறுதல் படிவம் அனுப்பியதற்கு ஒப்புகை சீட்டு வழங்கும் புதிய வசதி அறிமுகம்...

மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக அரசு அலுவலகங்களில் சாய்வு தளம், லிப்ட், கழிப்பறை அமைக்க உத்தரவு...

போசன் அபியான் திட்டம் 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்த முடிவு...

உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெறுவது கட்டாயம்~ தீபாவளி இனிப்பு, காரம் விற்பவர்களுக்கு கட்டுப்பாடு…

ஜாக்டோ ஜியோ- இன்றைய உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள்- பத்திரிக்கை செய்தி வெளியீடு



ENGLISH READING PRACTICE FOR PRIMARY STUDENTS...

Samagra Shiksha - New School Visit Format ( Primary And Upper Primary )...