ஞாயிறு, 28 அக்டோபர், 2018

நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நாளை முதல் சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் எனத் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் சுந்தரம்மாள் தெரிவித்தார்.




"திங்கள்கிழமை(அக்டோபர் 29) முதல் சத்துணவு சமைக்க மாட்டோம். நாளை முதல் சத்துணவு கூடங்கள் காலவரையின்றி மூடப்படும். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார் சுந்தரம்மாள். இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது சத்துணவு ஊழியர் சங்கம்.