புதன், 16 ஜனவரி, 2019

டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம்!

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முதன்முறையாக டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்கென்று போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு, நெரிசலைச் சீர்ப்படுத்தி வந்தாலும், முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், ROADEO என்று பெயரிடப்பட்ட டிராஃபிக் போலீஸ் ரோபோவை சென்னை மாநகர காவல் ஆணையர் அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாலை போக்குவரத்தைச் சீரமைத்தல், மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இதை புளூடூத் மூலமும் இயக்க முடியும். மக்களுடன் தொடர்பு கொள்ளவும், போக்குவரத்து சிக்னல்களைக் காண்பிக்கவும் ரோபோவுக்கு இரண்டு கைகள் உள்ளன. பக்கத்தில் உதவுவதற்கு ஒருவர் உள்ளார் என்ற உணர்வை உண்டாக்கும் வகையில் இதனுடைய கண்கள் உள்ளன. இந்த ரோபோவில் முக்கிய செய்திகள் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்.

சென்னையைச் சேர்ந்த தனியார் ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தின் மாணவர்கள், இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக போக்குவரத்துப் பணியில் ரோபோக்களை நியமிக்கும் இரண்டாவது நகரமாகச் சென்னை உள்ளது.

செவ்வாய், 15 ஜனவரி, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~நாமக்கல் ஒன்றிய செயற்குழு கூட்டம் ~ நாளிதழ் செய்திகளில்....

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

தொடக்கக் கல்வி- அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டமை, உபரி இடைநிலை ஆசிரியர்கள் மாற்றுப்பணி மூலம் நியமனம் செய்து ஆணையிடல் -சார்பு...

21.1.2019 தமிழகம் முழுவதும் 2381அங்கன்வாடி மையங்களுக்கு,இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப் பணியில் பணி நியமனம் செய்யயுள்ள ஆணையினை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அங்கம் வகிக்கும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் ஒருமித்த முடிவு செய்து அறித்துள்ளது...


அங்கன் வாடியில் இடைநிலை ஆசிரியர்களை மாறுதல் செல்வதை கண்டித்து, வரும் 18/I/19 அன்று ஜாக்டோ ஜியோ  ஆர்ப்பாட்டம் நடத்திடவுள்ளது.

மாறுதல் ஆணைகளை ஆசிரியர்கள் பெற வேண்டாம் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்  கேட்டுக் கொள்கிறது.

பொங்கல் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் நீதிமன்றத்தை நாட இருக்கிறது,  அதற்கான நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

நீதிமன்றத்தில் உடனே தடையாணை பெறுவதற்கு விரைந்து செயல்படுதல் உள்ளிட்ட அனைத்து முயற்சியும்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது.

மாற்று இயக்கத்தினர், சில மன்ற உறுப்பினர்களை அணுகி நீதிமன்ற செல்ல தங்களுடன் வருமாறு அழைப்பு விடுத்தால், அதனை மன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கவும்,

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பு மூலம் நீதிமன்றத்தை 
நாட உள்ளது என்பதை ஆசிரிய பெருமக்களுக்கு ம் மன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  
தெரிவித்துக் கொள்கிறது.

பாவலர்
க.மீனாட்சிசுந்தம் Ex.mlc,
பொது செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

18.01.19ஆம்நாள் ஜாக்டோ-ஜியோவின் மாவட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடுவீர்! வென்று காட்டுவீர்!

அன்பானவர்களே!வணக்கம் .

சமூகநலத்துறையின் அங்கன்வாடி மைய எல்கேஜி.,யூகேஜி.,
வகுப்புகளுக்கு தொடக்கக்கல்வித்துறையின் இடைநிலை ஆசிரியர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர் எனும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி்அமைச்சர் அவர்களின் கூற்றைக் கவனித்து ,
எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து கொள்வீர்!, 18.01.19ஆம்நாள் ஜாக்டோ-ஜியோவின் மாவட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடுவீர்! வென்று காட்டுவீர்! 
-முருகசெல்வராசன்.,
மாவட்டச்செயலாளர்.,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை)

திங்கள், 14 ஜனவரி, 2019

எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்~ உபரியானவர்களை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு…

தமிழ்நாடு மாநிலப்பெற்றோர் ஆசிரியர் கழகம்,சென்னை - பள்ளிகளில் 26.01.2019 அன்று பெற்றோர் ஆசிரியர் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்துதல்,அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் குறிக்கோள்கள் - பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுத்தம், சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேச்சு , கட்டுரை, மற்றும் ஒவியப் போட்டிகள் - மாவட்ட அளவில் நாள் மற்றும் இடம் ஒதுக்கீடு மற்றும் போட்டி நடுவர்கள் நியமித்தல் - சார்பு...

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தவறான செயல்திட்டம் - அமர்த்தியா சென்...

இடஒதுக்கீடு சாராம்சத்தை குழப்பிக்கொண்ட சிந்தனை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சாடியுள்ளார்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தவறான செயல்திட்டம் - அமர்த்தியா சென்

சமூகத்தில் உயர்சாதியினராக கூறப்படுபவர்களுக்கு பொருளாதாரத்தின் அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, இடஒதுக்கீடு சாராம்சத்தை குழப்பிக்கொண்ட சிந்தனை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சாடியுள்ளார்.

முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமூக நீதி கோட்பாட்டை வேரறுக்கக்கூடிய இந்த சட்டம் நிறைவேறியதை தொடர்ந்து பல்வேறு விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து தனது கருத்தை வெளியிட்ட பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், "பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு தனியாக 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் குழப்பமான சிந்தனையின் வெளிப்பாடு" எனக் கூறியிருக்கிறார்.

"இந்திய மக்கள் தொகையை முழுவதுமாக இடஒதுக்கீடு வளையத்துக்குள் கொண்டுவருவது சமூக நீதி நோக்கில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு திட்டத்தை நீக்குவதற்கு சமம். குழப்பிக்கொள்ளப்பட்ட இந்த செயல்பாடு சிக்கலான தீவிர அரசியல், பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.

நரேந்திர மோதி தலைமையிலான ஆளும் பாஜக அரசு வறிய மக்களுக்கான வேலைவாய்பை உறுதிப்படுத்த தவறியிருக்கிறது. வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய தளங்களிலும் கடுமையான தோல்வி தான். முந்தைய ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி திட்டங்களை பின்பற்றியதன் மூலம் மிகப்பெரிய பொருளாதார சரிவை அடையாமல் கடந்துகொண்டிருக்கிறார்கள். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படும் கூற்றை நான் மறுக்கிறேன். உண்மையில் இவை இரண்டும் தவறான கொள்கை" என்று அமர்த்தியா சென் கூறினார்.