வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மின் வாரியம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
மின்வாரியம் வெளியிட்டுள்ள 'ஆடியோ'வில், பெண்குரலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
*அதில், மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டும் போது அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து, அந்த மின் பாதையில் மின்தடை செய்த பின் வெட்ட வேண்டும்
*மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது
*வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனேயே உலர்ந்த ரப்பர் காலணியை அணிந்து, மின் மெயின் சுவிட்ச்சை அணைக்க வேண்டும். மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
*தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும் நடப்பதையும் தவிர்க்க வேண்டும்
*மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவைகம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. வீடுகளில் ஈரமான இடத்தில் மின் சுவிட்ச்களை பொருத்தக் கூடாது
*இடி, மின்னலின் போது தஞ்சமடைய மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மரங்கள், உலோக கம்பிவேலைகள் இல்லாத தாழ்வான பகுதியை தேர்வு செய்ய வேண்டும்
*இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற பொருடு்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் மிதிக்காமலும், தொடாமலும் இருக்க வேண்டும். அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்
*கட்டிடங்களுக்கும் மின் பாதைக்கும் இடையில் போதிய இடைவேளி இருக்குமாறு கட்டிடங்களை அமைக்க வேண்டும். ஐந்து கிலோ வாட்ஸ்க்கு மிகையான மின் இணைப்பு பெறும்போது, எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் பொருத்தப்பட வேண்டும்
*மின் கம்பங்களை பந்தல் அமைக்க நிலைக்காலாக பயன்படுத்துவதோ, விளம்பர பதாகைகளை அதில் பொருத்துவதோ கூடாது
*கனரக வாகனங்களை மின்கம்பங்கள், மின் மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது
*திறந்த நிலையில் உள்ள ஜன்னல்,கதவு ஆகியவற்றின் அருகில் இருக்க வேண்டாம்
*ஈரமான கைகளால் சுவிட்ச்களை இயக்கக் கூடாது