செவ்வாய், 31 அக்டோபர், 2017

அதிகரிக்கும் கார்பன் அளவு: ஐ.நா., எச்சரிக்கை

'உலகளவில் வெளியிடப்படும் கார்பன் வாயு அளவு, 2016ல் அதிகமாக இருந்தது' என ஐ.நா., சபை எச்சரித்துள்ளது.



இதுகுறித்து ஐ.நா., சபை வெளியிட்ட அறிக்கை:

 'கடந்த 2016ல் இதுவரை இல்லாத அளவாக கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த 2015ல் 400 பி.பி.எம்.,ஆக இருந்த இதன் அளவு, 2016ல் 403.3 பி.பி.எம்., ஆக அதிகரித்துள்ளது. கடந்த 30 லட்சம் ஆண்டுகளில் 2016ல் பதிவான அளவே மிக அதிகம்.

பி.பி.எம் என்பது வளிமண்டலத்திலுள்ள மொத்த வாயுக்களையும் எடுத்துக் கொண்டு அதை 10 லட்சம் பங்குகளாகப் பிரித்தால் வரும் அளவு. அதில் 403.3 பங்கு கார்பன் உள்ளது.

உலகளவில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட பசுமை குடில் வாயுக்களின் அளவை குறைக்காமல் இருந்தால், இந்த நுாற்றாண்டுக்குள் மிக அபாயகரமான வெப்பநிலையை பூமி எட்டும். இதனால் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.