கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புதிட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் குளித்தலை தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு உறுப்பினர், சொக்கலிங்கம் கலந்துகொண்டு பேசுகையில், “குழந்தைகள் வீட்டில் இருந்து பள்ளி மற்றும் வெளி இடங்களுக்கு பாதுகாப்பாக சென்று வரவேண்டும். குழந்தைகள் செல்போன் பேசுவதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும்.
குழந்தைகள் சேமிப்பு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அனைவருடன் அன்பாக பழக வேண்டும்” என்றார்.