புதன், 21 நவம்பர், 2018

நில நடுக்கத்தை கண்டுபிடித்து ‘அலெர்ட்’ செய்யும் அற்புத ‘ஆப்


திடீரென ஏற்படும் நிலநடுக்கத்தை கண்டுபிடித்து நம்மை அலெர்ட் செய்வதற்காகவே மைஷேக் ரன்ஸ் ( MYSHAKE RUNS ) என்றொரு ஆப்பை கண்டுபிடித்துள்ளனர் பெர்க்லே ( berkeley ) பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.


பெரும்பாலும் எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் என்பது ஒரு உடலுறுப்பு போன்றே ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால் பூகம்பம் ஏற்படும் முன் மக்களை காப்பாற்ற ஸ்மார்ட் போனில் தகவல் வந்தால் உயிர்சேதம் தடுக்கப்படும். 

இந்த ஆப் எப்போதும் நமது போனில் சத்தமின்றி ஓடிக் கொண்டிருக்கும். குறைவான பவர் மட்டுமே உபயோகிக்கும். 10 கி.மீ. தொலைவு வரை ஏற்படக்கூடிய நில அதிர்வுகளை கணிக்கவல்லது இந்த ஆப்.
நிலநடுக்கம் ஏற்படும் அறிகுறிகள் தென்படும் போது உடனடியாக தகவலை நமது போனுக்கு தெரியப்படுத்தும். பூகம்பத்தை கணிக்கும் கருவியாக நமது போனை மாற்றிவிடுகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபத்து வரும்முன்பே நம்மை தற்காத்து கொள்ள வந்திருக்கும் இந்த ஆப்பை கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு ‘சல்யூட்’. செய்து வரவேற்கின்றனர்