வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் சிவன் கோயிலில் சோழர், பல்லவர் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, வ.மதன்குமார், காணிநிலம் மு.முனிசாமி, தொலைதூரக் கல்வியின் முன்னாள் துணை இயக்குநர் ஜமுனா தியாகராசன், தொல்லியல் அறிஞர்கள் ர.பூங்குன்றன், ம.காந்தி ஆகியோர் வாணியம்பாடி அருகே மேற்கொண்ட கள ஆய்வில் இந்த கல்வெட்டை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது:
வாணியம்பாடி வட்டம், அம்பலூரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலை அண்ணாமலையார் கோயில் என்று இவ்வூர் மக்கள் அழைக்கின்றனர். இக்கோயில் விளைநிலங்களுக்கு நடுவே உள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

இந்தக் கோயிலை முதன் முதலில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டியதற்கான அடையாளமாக, சோழர் காலத்து கல்வெட்டு கோயிலின் வலது பக்கம் காணப்படுகிறது. இந்த எழுத்துகள் கோயில் புனரமைப்பின் போது சிதிலமடைந்ததால் சரியாகப் படிக்க இயலவில்லை. இதன்மூலம் கி.பி .10, 11-ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலச் சோழர் ஆட்சியில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது. சோழ மன்னர்களுக்கு பிறகு கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசு இப்பகுதியை ஆண்டுள்ளது. இதற்கு சான்றாக கோயில் பிரகாரத்தைச் சுற்றி அரை அடி அகலம் கொண்ட கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு எழுத்துகள் தமிழும், வடமொழி கலந்தும் எழுதப்பட்டுள்ளது.
பெரிய மண்டலத்தை ஆட்சி புரிந்த அதிகராயன் என்ற பெரிய தலைவன். சொன்ன சொல்லை மீறாத, சத்தியம் குணம் கொண்டவன். மூவரை வென்றவன்.உலகையே ஆண்டவன்.விஜயநகர அரசர்களில் உள்ள மூன்று குடிகளில் சாளுவ குடியைச் சேர்ந்த நரசிங்கராய மகாராயரின் குமாரன் திம்மராயர் ஆட்சி செய்த 1410-ஆம் ஆண்டு, மாசி மாதம், ஞாயிற்றுக்கிழமை அருணை நாயகன் பெருமான் கோயில் கொண்டுள்ள நல்லூரில் என்று மெய்க்கீர்த்திபோல் அமைந்துள்ளது.
கண்டன் என்று கல்வெட்டில் வருவது ஆயிரம் பேரைக் கொன்ற மன்னர்களுக்கு வழங்கப்படும் பெயராகும். அருணை நாயகன் என்பது சிவந்த நெருப்பின் உருவம் கொண்ட சிவபெருமான் கோயில் கொண்ட ஊர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. திருவண்ணாமலைக்கு நெருப்புடன் தொடர்பு கொண்ட ஈசன் அடிமுடி காண முடியாமல் தீப்பிழம்பாக நின்றது போல், இவ்வூருக்கும் நெருப்போடு தொடர்பு கொண்ட ஒரு கதை இருந்திருக்க வேண்டும். தமிழக வரலாற்றில் இக்கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.