சனி, 24 நவம்பர், 2018

கல்வித்துறையில் நேர்மையான அதிகாரிகளை காண்பதே கடவுளைக் காண்பது போல ஆகி விட்டது~ பள்ளி ஆசிரியர்கள் குமுறல்…

அரசு வழங்கும் வழக்கமான பணப் பலன்கள் பெற கல்வி அலுவலகங்களில் கட்டாய கட்டணம் வசூலிப்பதாக உதவி பெறும் பள்ளி/அரசுப்பள்ளி  ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் ஒரு  சி.இ.ஓ., மூன்றுக்கும்,
நான்குக்கும் மேலான டி.இ.ஓ.,க்கள்,10 க்கும் அதிகமான பி.இ.ஓ.,க்கள் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு ஆசிரியர்களின் தேர்வுநிலை, சிறப்பு நிலை, உயர் கல்வி ஊக்க ஊதியம் உள்பட பல்வேறு பணப் பலன்கள் தொடர்பான ஆவணங்கள் எழுதப்படுகிறது.
பணப்பலன்கள் அனுமதிக்கப்படுகிறது.
.
இதற்காக அரசு/அரசு  உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் நடத்தப்படுகிறது.

 பணம் வழங்காவிட்டால் பைல்கள் கிடப்பில் போடப்படுகின்றன. நொண்டிச்சாக்குகள் சொல்லி திருப்பப்படுகின்றன.
ஆசிரியர்கள் அவமானப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது: 

கல்வித்துறை  அலுவலகங்களில் கட்டாய வசூல் வேட்டை குதுகலாமாக நடக்கிறது.
உயர்அலுவலர்களுக்கும் இதில் பங்கு தர வேண்டுமென கூறியும் கேட்கப்படுகிறது.
இதனால் யாரிடமும்  இந்த வசூல்பற்றி சொல்வதற்கு  ரொம்பவே பயமாக உள்ளது.

 உயர்கல்வி ஊக்க தொகைக்கு 10 ஆயிரம், சரண்டருக்கு 2 ஆயிரம், 
தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற 10 ஆயிரம் ரூபாய் என விலைப் பட்டியல் வைக்காத குறையாக வசூலிக்கின்றனர்.

சில ஊழிய
ர் மட்டுமே நேர்மையாக உள்ளனர். 
கல்வித்துறையில் நேர்மையானவர்களை காண்பதே கடவுளைக் காண்பது போன்று அரிதாகி வருகிறது.

அரசு உதவிபெறும்பள்ளி ஆசிரியர்களிடம் மட்டுமல்ல,ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சி, அரசுப் பள்ளி ஆசிரியரகளிடமும் இவ்வாறான கட்டாயவசூல் வேட்டை தொய்வின்றி,
மிகச்சிறப்பாக,
அமோகமாக நடைபெறுகிறது .

இந்த கட்டாய வசூலுக்கென்றே ஆசிரியரகள் சிலரையே புரோக்கர்களாக்கி அலுவலகத்தின் வாசற் படியிலேயே உட்கார வைத்துக்கொண்டு உள்ளனர். இந்த அவலம்  எப்போது ,எப்படி
சரி செய்யப் படும் என்பதே ஆசிரியர்களின் ஏக்கமாக உள்ளது.குமுறலாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக