வியாழன், 6 டிசம்பர், 2018

அரசு அலுவலர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்மாதிரி பயிற்சி வகுப்பு - கலெக்டர் ஆசியா மரியம்



நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில்மைய அலுவலக கூட்டரங்கில் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்மாதிரி பயிற்சி மற்றும் அலுவலக நடைமுறைகள் குறித்த குறுகிய கால பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சியை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:-


நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் 3-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை முன்மாதிரி பயிற்சி மற்றும் குறுகிய காலப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
முன்மாதிரி பயிற்சியானது அனைத்து துறைகளை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் மற்றும் தாசில்தார்கள் நிலை அலுவலர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார்கள்.
அதேபோல் 5 முதல் 7-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கும் குறுகியகாலப் பயிற்சியானது கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் மற்றும் தேர்வுநிலை உதவியாளர் நிலை அலுவலர்களுக்கு அளிக்கப்படும். இதில் அலுவலக நடைமுறை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும். 

நடைமுறைகளை தெரிந்து கொள்ள உதவும். இது அரசு அலுவலர்கள் அலுவலக நிர்வாகத்தில் தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும், அலுவலக நடைமுறைகளை திறம்பட தெரிந்து கொள்ளவும் உதவும். இப்பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொண்ட பயிற்சியை உங்களுடன் பணிபுரியும் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்களையும் நல்ல திறமையான ஆளுமை பெற்றவர்களாக்கி மாவட்ட நிர்வாகத்தினை மேம்படுத்த முடியும்.
இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் பேசினார்.
இதில் ஆய்வுக்குழு அலுவலர் துரைராஜ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.