திங்கள், 23 செப்டம்பர், 2019

தமிழக அரசே!ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கை களை விரைந்து நிறைவேற்றுக!ஜாக்டோ-ஜியோ வின் தலைவர்களை அழைத்துப் பேசிடுக! ~ தமிழகமெங்கும் எதிர்வரும் 24.09.19 (செவ்வாய்)அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ வின் பட்டினிப்போராட்டம்…

அன்பானவர்களே!🙏 வணக்கம்.
தமிழக அரசே!ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கை களை விரைந்து நிறைவேற்றுக!ஜாக்டோ-ஜியோ வின் தலைவர்களை அழைத்துப் பேசிடுக!

 தமிழகமெங்கும் எதிர்வரும் 24.09.19 (செவ்வாய்)அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ வின் பட்டினிப்போராட்டம். 

தமிழகத்தின் ஆசிரியர்கள், அரசூழியர்கள், பணியாளர்கள் தங்களது வாழ்வாதரமான கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணல் காந்தியடிகளின் வழியில் , 
அகிம்சை நெறியில்  தங்களை வருத்திக்கொள்கிறார்கள். 
தங்களது வாழ்வாதாரத்திற்காக தங்களை தாங்களே வருத்திக்கொள்ளும் பட்டினிப்போராட்டத்தின் கோரிக்கைகளை தமிழகரசு விரைந்து நிறைவேற்றிடும் வகையில் பட்டினிப்போர் பெருந்திரள் பங்கேற்பும்,
பங்களிப்பும் நிறைந்ததாக, சக்தி்மிக்கதாய் இருக்க வேண்டுமல்லவா?!இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?!என்கிறீர்களா?!
தாங்கள், வேறொன்றும் செய்திட வேண்டியதில்லை.

 தங்களுக்கு இருக்கும் எல்லாவிதமான ,
முக்கியமான வேலைகளையும்,
பணிகளையும், அலுவல்களையும் 
சற்று தள்ளிவைத்து விட்டு, ஒதுக்கி வைத்துவிட்டு,
ஒத்திவைத்துவிட்டு  தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கல்வியின் நலன்களையும்,
ஆசிரியர் ,அரசூழியர்,
பணியாளர்கள்  
இழந்த உரிமைகளை மீட்பதற்கும், இருக்கும் உரிமைகளை பாதுகாத்திடுவதற்கும்,
பறிபோகும்  உரிமைகளை தடுத்து நிறுத்தி காத்திடுவதற்கும் 
எதிர்வரும் 22.09.19 (செவ்வாய்) அன்று  நாமக்கல் பூங்காச்சாலையில் நடைபெறும் பட்டினிப்போராட்டத்தில்  ஒருநாள் பங்கேற்றிடுங்கள்.  தற்போதைக்கு 
இப் பங்கேற்பும், பங்களிப்புமே போதுமானதாகும்.
   
தற்போது நம்முன்னுள்ள முதற் பெரும் பணியும்,
கடமையும் இதுவே என்று மனதில் நிறுத்தி நாமக்கல்  பட்டினிப்போராட்டத்தில்  பங்கேற்று பங்களிப்புச் செய்து சக்திமிக்கத்தாக்குங்கள் !
 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர், 
ஜாக்டோ-ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்,
முன்னாள் சட்டமேலவை உறுப்பினர்,
ஆசிரியரினக்காவலர்,
பாவலர்.திரு.க.மீ்.,அவர்களின் அறைகூவலை ஏற்று நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட, ஒன்றியப்பொறுப்பாளர்கள், மன்ற முன்னோடிகள் , ஆற்றல்மிகு மன்ற மறவர்கள், மறத்தியர்கள் பெருந்திரளாக பங்கேற்று 
நாமக்கல் பட்டினிப் போராட்டத்தை வலுப்படுத்துங்கள்!வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லுங்கள்! என்றே அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக