சனி, 23 நவம்பர், 2019

நவம்பர் 23,
வரலாற்றில் இன்று.

 ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவு தினம் இன்று.


தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார்.

லண்டனில் இருக்கும்போது லோர் ரிலே என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார்.

இயற்பியல் அறிஞரான இவர் ரேடியோ அலைகளில் ஆய்வு செய்து, மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை கண்டுபிடித்தார்.

இவர் இயற்றிய நூல்கள் உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை மற்றும் தாவரங்களின் நரம்புச் செயலமைவு.

மனவுறுதி, துணிச்சல், நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, பொறுமை ஆகியவைகளுக்கு உறைவிடமாய் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரும் வெற்றியும், பெரும் புகழும் ஈட்டியதன் வாயிலாக இந்தியாவின் புகழை உலகில் மிளிரச் செய்த இவர் தன்னுடைய 78ஆவது வயதில் (1937) மறைந்தார்.