புதன், 11 டிசம்பர், 2019

டிசம்பர் 11,
 வரலாற்றில் இன்று.

 மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று.

தேசிய கவி சுப்ரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன்.

இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகம் இவரை மீசை கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் போற்றுகிறது.

இவர் 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற புகழ் பெற்ற பாடல்கள் பாரதியாரால் எழுதப்பட்டவை.

'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிப்படுத்திய மானுடம் பாடவந்த மகாகவி தன்னுடைய 39 வது வயதில் (1921) இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்...