செவ்வாய், 3 டிசம்பர், 2019

டிசம்பர் 3,
வரலாற்றில் இன்று.


முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்த தினம் இன்று.

1967, டிசம்பர் 3, தென் ஆப்பிரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிறிஸ்டியன் பர்னாட் (Dr Christiaan Barnard) ஓர் ஆடவரின் நெஞ்சுக் கூட்டைத் திறந்து அம்மனிதரின் செயல் இழந்து வரும் இதயத்தை எடுத்துவிட்டு, செயற்கை உயிர்புக் கருவியுடன் (ventilator) பொருத்தப்பட்டிருந்த மூளை செயலிழப்பு அடைந்த ஒரு பெண்ணின் இதயத்தை அம்மனிதரின் உடலில் பொருத்தினார். அந்த அறுவை சிகிச்சையைச் செய்ய எட்டு மணி நேரம் பிடித்தது.  மொத்தம் 19 மருத்துவத் தொழிலாளர்கள் அப்பணியில் ஈடுபட்டனர். நன்கொடை கொடுத்தவரின் இதயம் புதிய உடலில் துடிக்கத் தொடங்கியதும் , அச்செய்தி உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியது. பர்னாட் அன்றைய பொழுதே உலகப் புகழ் பெற்றவரானார்.
அச்செய்தி மக்களின் இதயங்களைத் தொட்டது. (சிலேடை!!!)

 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் இதய மாற்று சிகிச்சையை, Every Seconds Counts (ஒவ்வொரு விநாடியும் முக்கியம்) எனும் நூல் வழி வரிசைக் கிரமப்படுத்திய டோனால்டு மெக்ரே சொல்கிறார். ஆனால் மருத்துவ மனையின் கதவுகளுக்குப் பின்னால் எல்லாம் அவ்வளவு சரியான நிலையில் இருக்கவில்லை.  

திருப்புமுனையாக அமைந்த இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி 53 வயது பலசரக்குக்காரரான Louis Washkansky, நோயுற்றார். மாற்று உறுப்பு பொருத்தப்படும்போது உடல், இதயத்தை எதிர்த்துத் தாக்குவதாக பெரினாட் கருதினார். ஏன் எனில் அப்படித்தான் வழக்கமாக நிகழும். ஆகவே அம்மனிதரின் எதிர்ப்புச் சக்தி முறையைக் கட்டுப்படுத்த மிகவும் தீவிரமான மருந்தைக் கொடுக்கத் தொடங்கினார்.

ஆனால் மருத்துவர் தவறாக எண்ணிவிட்டார். நோயாளிக்கு நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார்
(நியுமோனியா). எதிர்ப்புச் சக்தியைக் கட்டுப்படுத்த பலவகையான மருந்து அவருக்குக் கொடுக்கப்பட்டதால்,  அவரின் உடல் நுரையீரல் அழற்சியை எதிர்த்துக் குணப்படுத்த இயலவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின்னர், 18 நாட்களுக்குள் Washkasnsky  மரணமுற்றார்.

இருந்தாலும், மாற்று உறுப்பு சிகிச்சை வெற்றி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

 அமெரிக்காவில் இன்று, ஒவ்வொரு ஆண்டும் 30,000 பேர் முக்கிய உடலுறுப்புகளைப் பெறுகின்றனர். அவர்களில் 10இல் ஒருவர் மாற்று இதயத்தைப் பெறுகிறார். இருப்பினும், தற்போது 116,000 பேர் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கும் பட்டியலில் உள்ளனர். ஆனால் மாற்று உறுப்பு பற்றாக்குறை உள்ளது. முக்கிய உறுப்புகளுக்குக் காத்திருப்போரில் இருபது பேர் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர். அதே வேளையில், மாற்று இதயம் பெற்றவர்களில் பாதிப்பேருக்கு மேலானவர்கள்  13 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றனர். உயிர்வாழும் ஆண்டுகள் உயர்ந்துகொண்டே போகின்றன. பல ஆண்டுகளாக கண்டுவரும் மருத்துவ முன்னேற்றம், எதிர்ப்புச்சக்திக்கு எதிரான மேலும் சிறந்த மருத்துகள், நன்கொடையாளர்களுடன் நோயாளிகளைப் பொருந்தச் செய்யும் ஒரு தேசிய முறை இருத்தல் அதற்கான காரணங்களாகும்.

மேலும் நம்பிக்கை கொள்வதற்கு மேலும் காரணம் உள்ளது. காத்திருக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கான சிகிச்சையில்  விலங்கு அல்லது செயற்கை இதயம் உதவி வருகின்றன. நீண்ட காலத்திற்கு துடிப்பை இழந்த இதயங்களில் சிலவற்றுக்குத் துடிப்பை வழங்க புதிய தொழில்நுட்பங்களும் உதவுகின்றன. இந்த அறிவியல் மேம்பாடுகள் காரணமாக காத்திருக்கும் பட்டியல் ஒரு நாள் இல்லாது போகக்கூடும்.