திங்கள், 13 ஜனவரி, 2020

ஜனவரி 13, வரலாற்றில் இன்று.

விண்ணில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம் இன்று.

 கடந்த 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி ரஷ்யாவின் ‌சோயூஸ் விண்கலம் வாயிலாக விண்ணிற்கு செல்லும் குழுவில், இந்தியாவின் ராகேஷ் ஷர்மா  இடம்பெற்றார். இவர் தான் விண்ணிற்கு அனுப்பிவைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச்சேர்ந்த ராகேஷ் ஷர்மா. 1949ஆம் வருடம் ஜனவரி 13ஆம் தேதி பிறந்தார். தமது 21 வயதிலேயே (1970) இந்திய விமானப்படையில் சேர்ந்தார். பின்‌னர் படிப்படியாக பல்வேறு விமானப்படையில் பல்வேறு பொறுப்புக்களை வகித்து, மிக் ரக போர் விமானங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். அன்றைய ‌‌‌சோவியத் யூனியன் (ரஷ்யா,) பிரான்ஸ் மற்றும் வார்சா ஒப்பந்த நாடுகளுக்கு போர்விமானங்கள் குறித்த பயிற்சிக்கு சென்றார். இவரின் துடிப்புமிக்க பணியினை வெளிநாட்டவர்களே பாராட்டினர். இந்த சூழ்நிலையில் தான் கடந்த 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், விண்ணிற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியது. இதற்காக சோயூஸ் விண்கலம் தயாரானது. இதில் அந்நாட்டைச்சேர்ந்த இரு விண்வெளி வீரர்களில் மூன்றாவது வீரராக இந்தியாவின் ராகேஷ் ஷர்மாவும் தேர்வு செய்யப்பட்டார். இதன்படி ரஷ்யாவின் கஜகஸ்தான் மாகாணத்தின் பைகானூர் விண்வெளி நிலையத்திலிருந்து சோயூஸ்-டி.11 விண்கலம் கடந்த 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி விண்ணில் புறப்படத்தயாரானது. மொத்தம் 7 டன் எடைகொண்ட இந்த விண்கலத்தில், விண்வெளி விஞ்ஞானிகள் கையசைத்து வழியனுப்பி வைக்க விண்ணில் பறந்தார் ஷர்மா. மொத்தம் 7 நாட்கள், 21 மணிநேரம், 40 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தார். இதன் மூலம் விண்ணில் கால்தடம் பதித்த முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார். விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். ஷர்மாவை அப்போதைய பிரதமர் இந்திரா பாராட்டினார்.

ரஷ்யாவின் உயரிய விருது, இந்தியாவில் அ‌சோக்சக்ரா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (ஹெச்.ஏ.எல்.), தேசிய விமான பயிற்சி மையம் (என்.எப்.டி.சி) உள்ள மையங்களில் பல்வேறு பொறுப்புக்களை வகித்த ஷர்மா கடந்த 2001ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவர் ஓய்வு பெற்றாலும், இந்திய விண்வெளித்துறைக்கு இவர் ஆற்றிய சேவை அளப்பரியது.இதன்பின்னர் , இந்தியாவின் கல்பனா ‌சாவ்லா, சுனிதா வில்லிம்ஸ் ஆகி‌யோர் விண்வெளிக்கு சென்றிருந்தாலும், இவர்கள் அமெரிக்கவாழ் இந்திய வம்சாவழியினர் ஆவார். ஆனால் ராகேஷ் ஷர்மா இந்தியர் என்பதால் இவருக்கு இப்பெருமை உள்ளது.