செவ்வாய், 14 ஜனவரி, 2020

ஜனவரி 14,
வரலாற்றில் இன்று.

எழுத்தாளர், கணிதவியலாளர் லூயிஸ் கரோலின் நினைவு தினம் இன்று.

லூயிஸ் கரோல் (Lewis Carroll, ஜனவரி 27, 1832 - ஜனவரி 14, 1898).
இவரது இயற்பெயர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston).

ஆலிசின் அற்புத உலகம், Through the Looking-Glass, "The Hunting of the Snark", "Jabberwocky"
இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.

இவர் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் ( Alice in Wonderland ) எனும் நாவல் மிகப் புகழ்பெற்றது. இந்நாவலை 1865 ஆம் ஆண்டு எழுதினார். இது சிறார்களான கதை என்றாலும் பெரியவர்களையும்ஈர்க்கக்கூடிய வகையில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். பல மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
தமிழில் ஆலிஸின் அற்புத உலகம் எனும் தலைப்பில் எஸ். ராமகிருஷ்ணனால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது..