செவ்வாய், 14 ஜனவரி, 2020

ஜனவரி 14, வரலாற்றில் இன்று.

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் திரு சுர்ஜித் சிங் பர்னாலாவின் நினைவு தினம் இன்று.

தமிழ்நாட்டில் இரண்டு முறை ஆளுநராக இருந்த பெருமை பர்னாலாவுக்கு உண்டு. 1990 - 91 மற்றும் 2004 - 2011 வரை தமிழகத்தின் ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா இருந்தார். இதேபோல் உத்தரகாண்ட், ஆந்திரா, அந்தமான் ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பர்னாலா பணியாற்றியுள்ளார்.

ஆளுநர் பதவியில் ஜனநாயக நெறிமுறைகளுடன் செயல்பட்டவர்
சுர்ஜித் சிங் பர்னாலா

1991ல் பர்னாலா ஆளுநராக இருந்த போது திமுக ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு அறிக்கை கேட்டது. அப்போது சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக கூறி ஆட்சி கலைப்பு பரிந்துரைக்கு பர்னாலா மறுப்பு தெரிவித்து விட்டார். ஆட்சி கலைப்புக்கு பரிந்துரை செய்ய மறுத்துவிட்டதால் பர்னாலா பீகாருக்கு மாற்றப்பட்டார்.

பீகாருக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1991ல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

பர்னாலா சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.  அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவராக சுர்ஜித் சிங் பர்னாலா விளங்கினார். பொற்கோயில் நடவடிக்கைக்கு பிறகு 1985ல் பஞ்சாப் முதல்வர் பொறுப்பை வகித்தார். பின்னர் 1998ல் வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராக பர்னாலா பதவி வகித்தார்.