கொரோனா மருத்துவ செலவுகளுக்கு பென்ஷன் திட்ட சேமிப்பில் இருந்து பணம் எடுத்துக்கொள்ள அனுமதி
:::::::::::::::::::::::::::::::
:::::::::::
தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், அந்த பணத்தில் இருந்து ஒரு பகுதியை கொரோனா சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ள, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பணப்புழக்கமும் அடியோடு முடங்கி விட்டது. பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்துள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு, வங்கிகளில் 3 மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்துமாறு வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. இதன்படி வங்கிகள் இஎம்ஐ செலுத்தாதவர்கள், அதற்கு ஈடாக 8 முதல் 10 மாதங்களுக்கு கூடுதலாக தவணை காலத்தை நீட்டிக்கலாம் அல்லது வட்டி செலுத்தி விட்டு எஞ்சிய தொகையை இஎம்ஐயில் உயர்த்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளன.
இதுபோல், பிஎப்பில் உள்ள பணத்தில் 75 சதவீதத்தை எடுத்துக்கொள்ள பிஎப் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
இதுபோல், தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்த தொகையில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய பென்ஷன் திட்டத்தில் (என்பிஎஸ்) சேர்ந்துள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது அவரது மனைவி, குழந்தைகள், சட்டப்பூர்வமாக தத்தெடுத்த குழந்தைகள், அவர்களை சார்ந்து வாழும் பெற்றோர் ஆகியவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலோ சிகிச்சை செலவுக்காக நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு பகுதி பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது எனவும் இந்த ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதிப்படி, என்பிஎஸ் மற்றும் அடல் பென்ஷன் திட்டத்தில் 3.46 கோடி பேர் சேர்ந்துள்ளனர். இதில் அடல் பென்ஷன் திட்டத்தில் மட்டும் 2.11 கோடி பேர் சேர்ந்துள்ளனர் என ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.
தேசிய பென்ஷன் திட்டத்தில் (என்பிஎஸ்) சேர்ந்துள்ளவர்கள், அவரது மனைவி, குழந்தைகள், சட்டப்பூர்வமாக தத்தெடுத்த குழந்தைகள், அவர்களை சார்ந்து வாழும் பெற்றோரின் சிகிச்சை செலவுக்காக நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு பகுதி பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அடல் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.