*☀பல்வேறு முதிர்வு காலத்தைக் கொண்ட டெபாசிட்களுக்கான வட்டிவிகிதத்தை 0.40 சதவீதம் வரை குறைப்பதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது*
*பொதுத் துறையைச் சோ்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பல்வேறு முதிா்வு காலத்தைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.*
*எஸ்பிஐ சென்ற மே 12-ஆம் தேதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித குறைப்பை அறிவித்தது.*
*இந்த நிலையில், ஒரே மாதத்தில் தற்போது இரண்டாவது முறையாக வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 7-45 நாள்கள் முதிா்வு காலத்தை கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி 3.30 சதவீதத்திலிருந்து 2.90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.*
*அதேபோன்று, 180-210 நாள்கள் முதிா்வு காலத்தை கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டியும் 4.80 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுக்கும் குறைவான நிரந்த வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 5.50 சதவீதத்திலிருந்து 5.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 5-10 ஆண்டு முதிா்வு கால டெபாசிட்டுகளுக்கும் வட்டி விகிதம் 5.70 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய வட்டி விகிதம் புதன்கிழமையிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக