சனி, 30 மே, 2020

*☀WhatsApp எச்சரிக்கை; verification என்ற பெயரில் வாட்சாப் கணக்கை ஹேக் செய்ய ஒரு மோசடி கும்பல் இணையத்தில் சுற்றி வருவதாக தகவல்.ஹேக் செய்வதைத் தவிர்க்கும் வழிமுறைகள்.*

*☀WhatsApp எச்சரிக்கை; verification என்ற பெயரில் வாட்சாப் கணக்கை ஹேக் செய்ய ஒரு மோசடி கும்பல் இணையத்தில் சுற்றி வருவதாக தகவல்.*

*வெரிஃபிகேஷன் என்ற பெயரில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வதற்காக ஒரு மோசடி கும்பல் இணையத்தில் சுற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*

*வெரிஃபிகேஷன் என்ற பெயரில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வதற்காக ஒரு மோசடி கும்பல் இணையத்தில் சுற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.*


*வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகளை  ஹேக் செய்யும் மோசடி தொழில்நுட்ப குழுக்களுக்கு, அந்த கணக்குகளின் சரிபார்ப்புக் குறியீடு தேவைப்படுகிறது. எனவே இந்த சரிபார்ப்பு குறிகளை பெறுவதற்கு மோசடி குழுக்கள் பல சதி திட்டங்களுடன் உங்களை நெருங்குகிறது. சரி., இதை  எவ்வாறு தவிர்க்கலாம்?*

*வாட்ஸ்அப் தற்போது மிகவும் பயன்படுத்தப்படும்  ஒரு செய்தி பரிமாற்ற செயலி  ஆகும். கோடிக்  கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர்.  இதனால்தான் ஏராளமான மோசடி செய்பவர்களும் ஹேக்கர்களும்  வாட்ஸ்அப் செயலியால் ஈர்க்கப்படுகிறார்கள்.  கடந்த காலங்களில்  பல்வேறு விதமான மோசடி  சம்பவங்களை  பார்த்திருக்கிறோம்.  ஆனால் இப்போது வாட்ஸ்அப் மூலமக ஒரு புதிய வகை மோசடி தொடங்கி  உள்ளது. வாட்ஸ்அப் தொழில்நுட்பக் குழுவினர் போல  நடிக்கும் சிலர்,   ஒருவரின்  வாட்ஸ்அப் கணக்கின்  சரிபார்ப்புக் குறியீட்டை  அதாவது வெரிஃபிகேஷன்  கோட் - ஐ  பகிருமாறு கேட்கிறார்கள்.*

*பயனர்கள் தங்கள்  வலையில் விழுவதை  எளிதாக்குவதற்காக,* *மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் லோகோவை தங்கள் சுயவிவரப் படமாகப் பயன்படுத்துகின்றனர்.* *இருப்பினும், பேஸ்புக்கிற்கு சொந்தமான ஏஜென்ட் ஒரு வாட்ஸ்அப் செய்தி மூலம் பயனர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறுகிறது.* *மேலும், நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்  ஹேண்டில்  மூலமாகவே  அனைத்து பொது அறிவிப்புகளையும் செய்து வருகிறது.*
*ஒரு ட்விட்டர் பயனர் வாட்ஸ்அப் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்தவர் என  சொல்லிக் கொண்டு  புதிய  எண்ணிலிருந்து  செய்தி வந்தபோது, இந்த மோசடி தொடர்பாக ஒருவர்  புகாரளித்தார். உலகெங்கிலும்  உள்ள அதிகமான வாட்ஸ்அப் பயனர்களின் கவனத்திற்கு இதைக் கொண்டுவருவதற்காக இந்த ட்வீட்டை WABetaInfo பகிரங்கப்படுத்தியுள்ளது.*


*மோசடி செய்ய முயன்றவர் ஸ்பானிஷ் மொழியில் ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாக டேரியோ நவரோவின் ட்வீட்டர் செய்தி கூறுகிறது.   பயனர்கள் தங்கள் ஆறு இலக்க சரிபார்ப்புக் குறியீட்டு எண்ணை  வழங்குவதன் மூலம் தங்கள் அடையாளத்தை சரிபார்க்குமாறு  எஸ்எம்எஸ் செய்தி அனுப்புவார்கள்.*

*இந்த சரிபார்ப்புக் குறியீடு என்பது புதிய ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் எண்ணை பதிவு செய்யும்போது, பயனர்களின் தொலைபேசிக்கு  வரும்  OTP தான்.  பயனர் இந்த OTP ஐ வேறொருவருக்குக் கொடுத்தால், அவர்கள் அதை தங்கள் தொலைபேசியில் பதிவு செய்து உங்கள் வாட்ஸ்அப்பை  ஹேக் செய்யக்கூடும்.*

*இதன் மூலம்  உங்கள் சமீபத்திய அரட்டைகள் மற்றும்  நட்பில் உள்ளவர்களுடன்  அவர்கள்  அணுக முடியாது என்றாலும், ஹேக் செய்த பிறகு நமது மொபைலுக்கு வரும் அல்லது  பெறப்படும்  எந்த செய்தியும் அவர்களின் தொலைபேசிக்கு  அனுப்பப்பட்டு விடும். அதுமட்டுமல்ல, உங்கள் சுயவிவரப் படம், நிலை மற்றும் நீங்கள்  இணைந்துள்ள  குழுக்கள் தொடர்பான அனைத்தும் மோசடியாளர்களுக்கு கிடைத்துவிடும். அதிலிருந்து பல எண்களை மோசடி செய்பவர் எடுத்து பயன்படுத்த முடியும்.*

*இத்தகைய மோசடிகளிலிருந்து விலகி இருங்கள். எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும்  நிறுவனம் ஒருபோதும் கேட்பதில்லை என்பதை  எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல,  ஒருபோதும் OTP ஐ வேறு யாரிடமும் பகிரவேண்டாம்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக