ஞாயிறு, 3 மே, 2020

மே 3, வரலாற்றில் இன்று.

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் இன்று.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் அரசியல், தற்காலச் சமூகத்தின் நிலை, அறிவியல், அரசின் செயல்பாடு, கலாச்சாரம், வியாபாரம், விளையாட்டு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தேவைகள் உள்ளிட்ட அனைத்து துறைகள் சம்பந்தமாகவும் உண்மையான நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை பொறுப்புணர்வுடன் வெளியிடவும், சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமைக்கான பத்திரிக்கை சுதந்திரத்தினை காப்பதற்கும் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1986-ஆம் ஆண்டு கொலம்பிய பத்திரிக்கையாளர் கிலெர்மோ கானோ என்பவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலைப்பற்றி எழுதியதற்காக கொலை செய்யப்பட்டார். இதன்பின் ஐக்கிய நாடுகள் சபையில் உலக நாடுகளின் பத்திரிக்கை சுதந்திரத்தை காக்கும்விதமாக மே-3 ஆம் நாளினை உலக பத்திரிக்கை சுதந்திர நாளாக கொண்டாடப்படுகிறது.

 இந்நாளில் யுனெஸ்கோ அமைப்பு உலகில் சிறந்த பத்திரிக்கை எழுத்தாளருக்கான விருதினை வழங்கி கௌரவிக்கிறது.