திங்கள், 15 ஜூன், 2020

*🌐ஜூன் 15, வரலாற்றில் இன்று:பெஞ்சமின் பிராங்ளின் காற்றாடி(Kite Experiment) சோதனை நிகழ்த்திய தினம் இன்று.*

ஜூன் 15, வரலாற்றில் இன்று.

பெஞ்சமின் பிராங்ளின் காற்றாடி(Kite Experiment) சோதனை நிகழ்த்திய தினம் இன்று.

மின்னலில் மின்சாரம் இருப்பதை நிரூபணம் செய்வதற்காக 1752ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃபிலடோல்பியாவில் இதே தினத்தில் பெஞ்சமின் பிராங்ளின் மின்னல் ஏற்படும்போது பட்டத்தை பறக்கவிட்டு அதன் மறுமுனையில் ஒரு சாவியை கட்டினார். சாவியை Leydan Jar (Capacitor) பொருத்தினார். மின்சாரம் தாக்காதவாறு பட்டத்தில் உள்ள கயிற்றில் ஈரமற்ற பகுதியை கையில் பிடித்திருந்தார். மின்னல் தோன்றிய போது பட்டத்தின் வழியாக மின்சாரம் பாய்ந்து சாவியின் வழியாக Capacitor-இல் மின்சாரம் சேமிப்பாவதை கண்டார். இச்சோதனையில் மின்னல் வேறு எங்கோ கண்ணிற்கு புலனாகாத இடத்தில் தோன்றியிருந்தது. மின்னல் அருகில் தோன்றியிருந்தால் பிராங்ளின் மின்சாரத்தால் தாக்கப்பட்டிருப்பார். இருந்தபோதும் சாவியின் அருகே ஏற்பட்ட மின்சக்தியை உணர்ந்தார். இதன்மூலமாக மின்னலில் மின்சாரம் இருப்பதை நிரூபித்தார். மேலும் அவர் முன் எச்சரிக்கையாக இரும்பு கம்பிக்கு(lightning rod) மாற்றாக பட்டத்தை பயன்படுத்தினார். இரும்புக் கம்பியைப் பயன்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை கணித்திருந்தார். பெஞ்சமின் பிராங்ளினின் இந்தக் கண்டுபிடிப்பு இடிதாங்கி கண்டுபிடிக்க வழிசெய்தது. மேலும் இதன்மூலமாக மின்சாரத்தில் நேர்மறை மின்னோட்டம்(Positive Charge) மற்றும் எதிர்மறை மின்னோட்டம்(Negative Charge) இருப்பதை முதன் முதலாக உறுதி செய்தார். அறிவியல் துறையில் மட்டுமல்லாமல், எழுத்தாளர், அரசியல் தத்துவவியலாளர், அரசியல்வாதி, அயல்நாட்டுக்கான தூதர் போன்ற துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக