திங்கள், 15 ஜூன், 2020

*🌐ஜூன் 15, வரலாற்றில் இன்று:கலைமாமணி மணவை முஸ்தபா பிறந்த தினம் இன்று.*

ஜூன் 15, வரலாற்றில் இன்று.

*கலைமாமணி மணவை முஸ்தபா* பிறந்த தினம் இன்று.
                                                                      மணவை முஸ்தபா (15.6.1935 -  7.2.2017)
 அறிவியல் தமிழின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.

தமிழைச் செம்மொழியாக்க அரும்பாடாற்றியவர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி என எட்டு துறைகளைச் சார்ந்த 8 லட்சம் கலைச்சொற்களைக் கொண்ட அகராதிகளை உருவாக்கியவர்.

இவர் எழுதிய நூல்களில் ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ எனும் நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசினையும், ‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்’ எனும் நூல், 1996 ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள்’ எனும் வகைப்பாட்டில் முதல் பரிசினையும் பெற்றிருக்கிறது.

தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குனர், ‘புத்தக நண்பன்’ மாத இதழ் ஆசிரியர், யுனெஸ்கோ கூரியர் பன்னாட்டு மாத இதழின் ஆசிரியர், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழ் பதிப்பின் தலைமைப் பொறுப்பாசிரியர்.

1985ஆம் ஆண்டு இவருக்குத் தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக