வியாழன், 25 ஜூன், 2020

*🌸ஜூன் 25, வரலாற்றில் இன்று:மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம் இன்று.*

ஜூன் 25, வரலாற்றில் இன்று.

மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம் இன்று.

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்ஸர் என்ற இடத்தில் பிறந்தார்.

 ஆரம்பக்காலத்தில் 10 வருடங்கள் வீட்டிலேயே கல்வி பயின்றார். 1916இல் கப்பற்படையில் சேர்ந்தார். துணைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1920இல் கடற்படைத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். அதற்கு அடுத்த வருடம் இளவரசர் எட்வர்டுடன் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் சென்றார்.

கப்பற்படையில் படிப்படியாக உயர்ந்த இவர், கேப்டன் பதவியை பெற்றார். 1939இல் கெல்லி போர்க்கப்பலின் பொறுப்பு வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹெச்.எம்.எஸ். கெல்லியின் கமாண்டராக பல துணிச்சலான வியூகங்களை வகுத்து செயல்படுத்தினார்.

 1947இல் இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

சுதந்திரத்துக்குப் பிறகு பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியாவைவிட்டு வெளியேறி விட்டனர். ஆனால் மவுண்ட்பேட்டன் 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார்.

1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி விடுமுறைக்காக அயர்லாந்து சென்றிருந்த போது ஐரிஷ் குடியரசின் ராணுவத்தினர் இவர் பயணம் செய்த படகில் குண்டு வைத்துக் கொன்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக