செவ்வாய், 16 ஜூன், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரிமர் மன்றப் பொறுப்பாளர்கள் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலருடனானன சந்திப்பு நிகழ்வு.

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  பொறுப்பாளர்கள் பரமத்தி ஒன்றிய ஆசிரியர் கோரிக்கைகள் சார்ந்து   15.06.2020(திங்கள்) பிற்பகல் 03.30 மணிக்கு பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை பரமத்தி வட்டாரவள மைய அலுவலகத்தில் சந்தித்தனர்.*

*இச்சந்திப்பில்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற உறுப்பினர்  செ.சங்கீதா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் .லூ.சூசை அந்தோணி, ஒன்றிய துணைச்செயலாளர் ச.காமராசு, மகளிரணி அமைப்பாளர் வீ.மாலதி, ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளர் மா.மலர்விழி, ஒன்றியச் செயலாளர் க.சேகர், ஒன்றியத் தலைவர்                 .நா.ரங்கசாமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் இரா.ரவிக்குமார்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்     .ப.சதீசு, மாவட்டப்  பொருளாளர் சு.பிரபு, மாவட்டச்  செயலாளர் . மெ.சங்கர், மாநிலச் செயலாளர் முருக.செல்வராசன் ஆகியோர் பங்கேற்றனர்.*

*இச்சந்திப்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.அவையானவை,     1)ஒன்றியத்தில் பணியாற்றும் இரண்டு  ஆசிரியர்களின்  உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை இரத்து செய்து இருக்கும் தவறான செயல்முறை திரும்பப்பெறப் படவேண்டும். இரண்டு ஆசிரியர்களுக்கும்  தொடர்ந்து  ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்படவேண்டும். 2)ஒன்றியத்தில் விடுபட்டுள்ள 12 தொடக்கப்பள்ளிகளுக்கும்  தூய்மைப்பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்பு மானியம் தொடர்ந்து வழங்கிட வேண்டும்.3)பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக தொகுப்பூதிய இடைநிலை ஆசிரியருக்கு 2020பெப்ரவரி மாதம் முதல் மூன்று மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.*
மேற்கண்ட கோரிக்கைகளை உயர்அலுவலர்களின் ஆலோசனைப் பெற்று ஆவன செய்வதாக பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் தெரிவித்து
உள்ளார்.

இச்சந்திப்பை அடுத்து ஒன்றியச்செயற் குழுக்கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறுவனர்-பொதுச்செயலாளர் . பாவலர்.திரு.க.மீ.,அவர்களின் திருஉருவப்படத் திறப்பு  செய்யப்பட்டு
மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.பாவலர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*க.சேகர்*
*ஒன்றியச் செயலாளர்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக