செவ்வாய், 14 ஜூலை, 2020

*🌐ஜூலை 14,* *வரலாற்றில் இன்று:கிருமி நாசியான மஞ்சள் தினம் இன்று.*

ஜூலை 14, வரலாற்றில் இன்று.

நம்முடைய கலாச்சாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள். மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.

மஞ்சளின் பெருமையைக் கொண்டு சேர்க்கும் வகையில் மஞ்சள் தினம்  ஜூலை 14ஆம் நாள்  கொண்டாடப்பட்டு வருகிறது.

மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை.

உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும்.

மஞ்சள் 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.

இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருளாக மஞ்சள் உள்ளது. இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக கருதுகின்றனர்.

மஞ்சளில் குர்க்குமின் எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப்  பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.

மஞ்சளின் பயன்கள் :
உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். 

மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.

மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.

மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளி பிரச்சனையும் சரியாகும்.

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நன்று. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக உதவுகிறது.

மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி  தூளை  நீரில் இட்டு ஊற வைத்து  காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் மற்றும் நாக்குச் சுவையின்மை குணமாகும்.
முகத்தோல் பொழிவு  பெற  மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக