ஞாயிறு, 19 ஜூலை, 2020

*🌐ஜூலை 19, வரலாற்றில் இன்று:இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 19, வரலாற்றில் இன்று

இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம் இன்று.

இவர் 1938ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் பிறந்தார்.

நிலை மாறா அண்டவியலை ஆதரிக்கும் இவர், ஃபிரெட் ஹாயிலுடன் இணைந்து ஹாயில்-நர்லிகர் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். 41கி.மீ. உயரத்தில் மீவளி மண்டலத்தில் (Stratosphere) நுண்ணுயிரிகள் கண்டெடுக்கப்பட்டு, அவற்றை ஆய்வு செய்த குழுவுக்கு தலைமையேற்று வழி நடத்தினார்.

மேலும் இவரின் பங்களிப்பிற்காக பத்ம பூஷண் விருது (1965), இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் இந்திரா காந்தி விருது (1990), பத்ம விபூஷண் விருது (2004), மகாராஷ்டிர பூஷண் விருது (2010), சாகித்ய அகாடமி விருது (2014) உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக