அக்டோபர் 21,
வரலாற்றில் இன்று
உலக ஆப்பிள் தினம் இன்று.
அந்தவகையில் ஆப்பிள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள்.
உலகளாவியரீதியில் 7500க்கும் மேற்பட்ட ஆப்பிள் வகைகள் உள்ளன.
வாழைப்பழங்கள், திராட்சைப் பழங்களினைத் தொடர்ந்து உலகில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது ஆப்பிள் பழங்கள் ஆகும்.
கஸ்பியன் மற்றும் கருங்கடலிற்கு இடைப்பட்ட பிராந்தியத்திலே ஆப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாம். குறிப்பாக, கசகிஸ்தான் நாட்டிலேயே ஆப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.
கி.மு 6500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் ஆப்பிள் பழங்களினை நுகர்ந்ததிற்கான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆப்பிள் மரங்கள், ஒரு ஆப்பிள் பழத்தினை உற்பத்தியாகுவதற்கு 50 இலைகளிலிருந்து சக்தியினை பெற்றுக்கொள்கின்றன.
ஆப்பிள் மரங்களில் சில 40அடி உயரத்திற்கும் அதிகமான உயரம்வரை வளரக்கூடியதுடன், 100ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியவையாகும்.
புராதன உரோமர்களினதும், கிரேக்கர்களினதும் விருப்பத்திற்குரிய பழமாக ஆப்பிள் விளங்கியது.
ஆப்பிள்கள் மரங்கள் ரோஸ்(Rose) குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும்.
ஆப்பிளின் இரசாயனவியல் பெயர்; "அப்ளிகுஸ் ரோசாசியா"
ஆப்பிள் மரங்கள் 4 – 5 வயதினை அடைந்தவுடன் பழங்களினை தோற்றுவிக்க தொடங்குகின்றன.
தூய ஆப்பிள் பழங்களினை நீரில் இட்டால் அவை மிதக்கும் தன்மை கொண்டவையாகும். ஏனெனில் ஆப்பிள் பழங்களில் 25% வளி உள்ளடங்கியுள்ளது.
ஆப்பிள் பழங்களின் தோலில் அதிகமான நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளடங்கியுள்ளன. இதனால் அவற்றினை தோலுடன்(Quercetin அடங்கியுள்ளது) உட்கொள்வதே சிறந்ததாகும்.
நடுத்தர அளவினை உடைய ஒரு ஆப்பிளில் 80 கலோரி சக்தி உள்ளடங்கியுள்ளதாம்.
உலகில் அதிகளவில் ஆப்பிள் பழங்களினை உற்பத்திசெய்யும் நாடுகள்; சீனா(உலக உற்பத்தியில் 40% ) , ஐக்கிய அமெரிக்கா, போலாந்து, ஈரான், துருக்கி, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, சிலி.
ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடிக்க ஆப்பிள் பழங்களே காரணமாகும்.
"தினசரி ஒரு ஆப்பிள் பழத்தினைச் சாப்பிடுவதன்மூலம் மருத்துவரை நாடவேண்டிய தேவையே இருக்காது" என்பது உலகளாவிய
ரீதியிலான ஒரு பிரபல்யமான மருத்துவக் குறிப்பாகும். ஏனெனில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களினை ஆப்பிள் பழங்கள் கொண்டிருப்பதனால் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக