கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.
---------------------------------------------
ஒன்றியத்தின் தகுதியுடைய இடைநிலை ஆசிரியருக்கு பணிமூப்பின் படி பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு வழங்கிட வேண்டும்.
ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிடும் வகையில் திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.
ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிடாமல் பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் ,ஒன்றியத்திற்குள் இடமாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உரிமையினை சட்டப்பூர்வமாக தொடர்ந்து பாதுகாத்திட வேண்டும். ..
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும்-கல்வித்துறையும் நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக் கிளையின் சார்பில் 01/05/2023 முற்பகல் 10.30 மணியளவில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலகம் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் நா.ரங்கசாமி தலைமை வகித்தார்.
ஒன்றிய துணைச் செயலாளர் லூ.சூசை அந்தோணி வரவேற்புரையாற்றினார்.
இவ்வார்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மு.ரகுபதி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் லூ.சூசை அந்தோணி, ஜெ.கலைவாணி, மகளிரணி அமைப்பாளர் வீ.மாலதி, துணை அமைப்பாளர் நா.வளர்மதி, இலக்கிய அணி அமைப்பாளர் பொ.அன்பரசி, இளைஞரணி அமைப்பாளர் திரு.துரைமுருகன், செயற்குழு உறுப்பினர்கள் அ.வளர்மதி, த.மாலதி பெ.குப்புலட்சுமி, மு.லதா, இரா.கனிமொழி, சு.அபிராமசுந்தரி, சு.ப.உமையாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் மெ.சங்கர் தொடக்க உரையாற்றினார்
ஒன்றியச் செயலாளர் க.சேகர் கோரிக்கை உரையாற்றினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் கு.பத்மாவதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.சதீஷ்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.கந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் வெ.வடிவேல், சி.ஜெயவேல், மாவட்ட துணைத் தலைவர், இரா.ரவிக்குமார், கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் திரு.இர.மணிகண்டன், பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் பி.கண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் த.தண்டபாணி, மாவட்டப் பொருளாளர் சு.பிரபு, மாவட்டத் தலைவர் அ.ஜெயக்குமார் ஆகியோர் ஆதரவுரை ஆற்றினார்கள்.
மே தினத்தன்று நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் முருக செல்வராசன் ஆர்ப்பாட்டப் பேருரையாற்றினார்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ச.துரைமுருகன் நன்றியுரை ஆற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக