To know your monthly salary details, click here...
To know your PTPF account slip, click here...
To know your CPS account slip, click here...
To check your health card 2016,click here...
அன்பானவர்களே! வணக்கம்.இரண்டாம்பருவத் தேர்வு விடுமுறையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோருக்கு கணினிப்பயிற்சி தரப்படும் என்பதை ஆசிரியர் மன்றம் ஆட்சேபிக்கிறது ;கடுமையாக எதிர்கிறது.வேலைநாள் இழப்பு எங்கு(பள்ளியில்/அலுவலகத்தில்) ஏற்பட்டதோ அங்குதான் வேலைநாள் ஈடுசெய்வதற்கு ஆணையிடுவதுதான் பொருத்தமானதாகும்.இதைசெய்யாது இரண்டாம்பருவத்தேர்வில் கணினிப்பயிற்சி என்று அறிவிக்கப்பட்டுஇருப்பதுஒரு வகையில் தமிழக அரசின் பழிவாங்கும்நடவடிக்கையாகும்;அச்சுறுத்தல் தன்மை கொண்டதாகும் என்றே கருத வேண்டி வருகிறது.ஜாக்டோ-ஜியோ வின் போராட்ட நடவடிக்கைகளில் பின்னடைவினை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே கணினிபயிற்சி அறிவிப்பை ஆசிரியர்மன்றம் காண்கிறது.எத்தகு அச்சுறுத்தல்களையும்,அடக்குமுறைகளையும்,மிரட்டல்களையும்,சதித்திட்டங்களையும்தூள்தூளாக்கிதமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு அலுவலர்களின் ஒட்டுமொத்த பொதுநலன்களை பேணிப்பாதுகாப்பதில்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்புமுழுவீச்சோடு தொண்டாற்றும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் .இனமானக்காவலர் .பாவலர்.க.மீ அவர்கள் ,தமிழ்நாடு ஜாக்டோ-ஜியோவின் மாநில அமைப்போடு இணைந்து நின்று கணினிப்பயிற்சி திட்டத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி.~முருகசெல்வராசன்.