வெள்ளி, 22 டிசம்பர், 2017

Facebook ல் அறிமுகமாகும் புதிய வசதி!



ஃபேஸ்புக்கில் அறிமுகமின்றி ஒருவரின் புகைப்படத்தை மற்றொருவர் வெளியிட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.

'போட்டோ ரிவ்யூவ்' எனப்படும் இந்த புதிய தொழில்நுட்பம், உங்கள் அனுமதியின்றி உங்கள் புகைப்படங்களை யாரேனும் அப்லோடு செய்தால் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும். உங்களுக்கு விருப்பமிருந்தால் அந்தப் புகைப்படத்தில் உங்களை டேக் செய்து கொள்ளலாம். இல்லையெனில் சம்பந்தப்பட்ட நபரிடம் கூறி அதை நீக்கச் சொல்லலாம் அல்லது ஃபேஸ்புக்கிடம் புகார் அளிக்கலாம்.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயந்திர கற்றல் பிரிவின் தயாரிப்பு மேலாளர் நிபுன் மேத்தர் கூறுகையில், "இந்தத் தொழில்நுட்பத்தால் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி மற்றவர்களால் பதிவிடுவதைத் தவிர்க்க முடியும். இந்த அம்சம் மக்களுக்கு அதிகமான கட்டுப்பாட்டை வழங்குகிறது. மேலும் பயனர்கள் தங்கள் பாதுகாப்பை உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஒரே புகைப்படத்தில் பல ஃபேக் ஐடிகள் இயங்கிவருவதை நாம் பார்த்திருப்போம். இனிமேல் இதுபோன்ற ஐடிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக