வெள்ளி, 22 டிசம்பர், 2017

EMIS Android Application's News...

அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு "அடையாள அட்டை" வழங்குதல் சார்பாக மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய "Emis Android Application" வெளியிடப்பட்டுள்ளது.

1.இணையதளத்தில் பதிவு செய்துள்ள மாணவர்களின் பெயர்கள் மட்டுமே ஆண்ட்ராய்ட் செயலியில் காட்டப்படும்.இணையதளத்தில் இல்லாத மாணவர்களின் பெயர்கள் ஆண்ட்ராய்ட் செயலியில் இருக்காது.

2.ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்தி புகைப்படம்,இரத்தவகை, ஆதார் எண் போன்றவற்றை பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.

3.அடையாள அட்டை அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் தனியார் பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்த தேவை இல்லை.

4.Student id செயலியை அடையாள அட்டைக்கான தகவல்கள் பதிவேற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும்.புதிய பதிவு,சேர்த்தல், நீக்கல் செய்ய இயலாது.

5.வருகைப்பதிவேட்டில் உள்ள மாணவர் பெயர்களும், இணையதளத்தில் உள்ள மாணவர் பெயர்களும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

6.செயலியை Playstore ல்
டவுன்லோடு செய்துகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக