வியாழன், 18 ஜனவரி, 2018
அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்~ அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்...
அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து
ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முதல் கட்டமாக ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டு நிறுவப்படும்.
இந்தத் திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகநிதிப் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, பள்ளியின் ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் இடைநிற்றலைத் தடுப்பதற்காக, மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடைகள், பாடப் புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை தொடர்ந்து வழங்கப்படும்.
அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்படும்.
அனைத்து மாணவர்களின் வருகையைப் பதிவுசெய்ய, பயோ மெட்ரிக் முறை கொண்டுவர ஆலோசனை நடைபெற்றது.
மாணவர்களின் கற்றல் முறையை எளிமைப்படுத்தவும், செயல்முறைக் கல்வியை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது 9ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் தொழில்சார் கல்வி முறை, இனி ஆரம்பப் பள்ளி வகுப்பிலேயே அறிமுகப்படுத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
முக்கிய அறிவிப்பாக, அனைத்துப் பள்ளிகளிலும் பாலர் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இடைநிற்றலைக் குறைக்க அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் விரைவில் ஆதார் கார்டு வழங்கப்படும் என மத்திய கல்வி ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
DEE - EMIS - பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆதார் ஆகியவை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு...
(18.01.2018 முதல் 25.01.2018 வரை -1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் புதிதாக மாணவர்களை விவரங்களை பதிவேற்ற இயலும்...)
புதன், 17 ஜனவரி, 2018
ஜனவரி மாத இறுதியில் ‘HD’ செட்டாப் பாக்ஸ் அறிமுகம்...
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம், ஜனவரி மாத இறுதியில் 'ஹெச்டி' செட்டாப் பாக்ஸ்களை அறிமுகப்படுத்துகிறது.
மேலும் விரைவில் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் 'பிரீபெய்டு' திட்டத்தையும் அறிமுகப்படுத்தஉள்ளது.
இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி, கடந்த ஆண்டு செப்.2-ம் தேதி தொடங்கிவைத்தார்.மொத்தம் 70 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் முதல்கட்டமாக 24 லட்சம் பாக்ஸ்களுக்கான உத்தரவுஅளிக்கப்பட்டு, 17 லட்சத்து 54 ஆயிரத்து 480 செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.இதில், 16 லட்சத்து 63 ஆயிரத்து 10 பாக்ஸ்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 13 லட்சத்து 28 ஆயிரத்து 843 செட்டாப் பாக்ஸ்கள் தற்போது வரை இணைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன.சென்னையில் 30 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு, 22 ஆயிரம் பாக்ஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே அரசு கேபிள் நிறுவனத்தில் இணைந்துள்ள 26 ஆயிரத்து 500 கேபிள் ஆபரேட்டர்கள், அந்தந்த பகுதி கேபிள் நிறுவன தாசில்தார்களிடம் ரூ.180 செலுத்தி பாக்ஸ்களை பெற்று இணைப்பு வழங்குகின்றனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 300 சேனல்கள் கொண்ட ரூ.175-க்கான தொகுப்பையே விரும்பி பெற்றுள்ளனர். சேவையை மேம்படுத்தும் வகையில், இம்மாத இறுதியில் துல்லிய படங்களை தரும் 'ஹெச் டி' இணைப்பை தர முடிவெடுத்துள்ளோம். ரூ.225க்கு 380 வழக்கமான சேனல்களுடன் 30 ஹெச்டி தர சேனல்கள் இதில் கிடைக்கும். இதற்கு வழக்கமான கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டிசெலுத்த வேண்டும்.
அதே போல் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தும் 'பிரீ பெய்டு' முறையை விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தால் சரிசெய்யவும், மாற்றித்தரவும் மாவட்டத்துக்கு ஒரு சேவை மையம் அமைத்துள்ளோம்.
அதே போல், இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தில் இதுவரை 50 தொழில் முனைவோர் இணைந்துள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 117 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்
கல்வி சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு விதிப்பு...
உயரதிகாரிகளின் முன்அனுமதியின்றி, ஆபத்தான இடங்களுக்கு மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லக்கூடாது; விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,' என, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், அரையாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில், ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களை, கல்வி சுற்றுலாஅழைத்து செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இது வழக்கமாக நடைபெறும் என்ற போதும், மாணவர் பாதுகாப்பு கருதி, பல்வேறு உத்தரவுகளை கல்வித்துறை, அவ்வப்போது பிறப்பிக்கும். சில தினங்களுக்கு முன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் மூலம் தலைமைஆசிரியருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், 'பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் எனில், அந்த இடம், நாட்கள் உள்ளிட்ட விவரங்களை, உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, அனுமதி பெற வேண்டும்.
குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கும், இடம் பற்றி முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாணவியரை, பெண் ஆசிரியர்களுடன் அழைத்து செல்ல வேண்டும். ஆபத்தான, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்லக்கூடாது,' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













