வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

DEE PROCEEDINGS- TEACHERS TPF ACCOUNT REG...

SCERT - 4 DAYS PHONETIC TRAINING FOR PRIMARY & UPPER PRIMARY TEACHERS...

SCERT-தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி...

24-02-18 அன்று சென்னையில் ஜாக்டோ-ஜியோவின் மகளிர் மறியல்~ஆசிரியர் மன்றம் அழைக்கிறது....

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் 
முத்திரைப்பதிக்கும் போராட்டம் நம்சமகாலத்தில் சென்னையில் ஜாக்டோ-ஜியோ பதாகையில் நடைபெற்று வருகிறது.

இப்பெரும்.
போராட்டத்தில் 
நம்
இனமானக்காவலர்,பொதுச்செயலாளர்,பாவலர்அய்யா அவர்களின்
வழிகாட்டுதலில் ஆசிரியர்மன்றம் முழுவீச்சுடன் களமாடுகிறது.

இப்பெரும்போராட்டத்தின் சிறப்பான வடிவமைப்பு,
போராட்ட யுத்தி 24.02.18-சனி அன்று மகளிர்மறியல் என்பதாகும்.

நாமக்கல் மாவட்ட ஆசிரியர்மன்ற
மகளிரணி அமைப்பாளர் திருமதி.வே.அமுதா(மல்லசமுத்திரம்)அவர்களின் தலைமையில் பெண்ணாசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

நாமக்கல் நகரில் இருந்து நாமக்கல் ஒன்றியச்செயலாளர்திரு. அ.செயக்குமார் அவரகள் பெண்ணாசிரியர்களை சென்னை
அழைத்துச்
சென்றுவரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மாவட்டமகளிரணி துணைஅமைப்பாளர்திருமதி.ந.தங்கம்மாள்,மாவட்டதுணைத்தலைவர்.திருமதி .பொன்.திலகம்,
திருமதி.கு.பாரதி மாவட்டத்துணைச்செயலாளர் ஆகியோர் குழுவாக செயல்பட்டு ஒன்றிய பெண்பொறுப்பாளர்களை அணிதிரட்டி  அழைத்துச்சென்றுவரும் பணியை மேற்கோண்டுள்ளனர்.

பெண்கள் சக்தி மறியல் போராட்டத்தை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் எனும் நம்பிக்கையோடு
பெருஞ்சக்தி எனப்படுவது பெண்களேயாகும் எனும் மரபுவழி நம்பிக்கை வெல்லும்; மகளிர்மறியல் வெல்லும்;மகளிர் வெல்வோம்
எனும் கம்பீரத்தோடு சிறைபுகும் மன்றப்
பெண்பொறுப்பாளர்களை வரலாறு பதிவுச்செய்துக்
கொண்டு பாராட்டும்.

எமக்காக நாமே
சிறைபுகுவோம்;
ஊதியம்,
ஓய்வூதியம்,
உரிமைகள் காப்போம்;
பெறுவோம்...எனும்  பெண்மையின்
முழக்கத்தில் வங்கக்கடல் அதிரட்டும்;
சிவக்கட்டும்;
ஆவேசமாய்
பொங்கி எழட்டும்.

வரலாற்றி்ன் நீண்ட நெடிய பதிவுகளில்
அநீதிக்கு எதிரான பெண்களின் அறத்சீற்றம் -
ஆவேசம்-
 சினம் 
பெருந்தீயாய் உருவெடுத்து  பெரும் நகரங்களை,
அநீதி இழைத்த அரசுகளை சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கி  நீதியை நிலைநிறுத்தி உள்ளது 
என்பதை 
கற்றுள்ள- கற்பிக்கும் பெண்ணாசிரியர்களே! மகளிர்மறியலை வெற்றிபெறச்செய்யுங்கள்.
பெண்சக்தி பெருஞ்சக்தி.இவ்உண்மையை மறியல்களம் மெய்ப்பிக்கட்டும்
              ~முருகசெல்வராசன்.


வாழ்க்கை போராட்டம் ...


போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . ஏன் நாம் பிறப்பதே ஒரு போராட்டம் தானே . லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு , போராடி தான் நமக்கான இருப்பை , பிறப்பை உறுதி செய்துள்ளோம் .போராட்டத்தில் பிறந்து , போராட்டத்தில் வளர்ந்து , போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை . நாம் இன்று போராட்டமே இல்லாத வாழ்க்கையை மட்டுமே வாழ நினைக்கிறோம் . இது எப்போதும் சாத்தியமில்லை . பிறப்பதற்கே லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன ?!

வீதியில் நின்றுநமக்காக போராடுவதும் , நாட்டுக்காக போராடுவதும் 
வீணல்ல;இழிவல்ல.
நம்பிக்கையோடு 
ஜாக்டோ-ஜியோவின் 
சென்னை
தொடர்மறியலில்
பங்கேற்று வெற்றிபெறுங்கள்.
                நன்றி.
       ~முருகசெல்வராசன்.

ஜாக்டோ-ஜியோவின் மூன்றாம் நாள் (23.02.18-வெள்ளி) மறியல் போராட்டத்திற்கு நாமக்கல்மாவட்டத்தின் சார்பிலும்,மாநில அமைப்பின்சார்பிலும் மாநிலத்தலைமைநிலையச்செயலாளர் திரு.பெ.பழனிசாமி(நாமகிரிப்பேட்டை) அவர்கள் கூட்டுத்தலைமை ஏற்கிறார்...

அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்அய்யா அவர்களின் அறைகூவலை 
ஏற்று
ஜாக்டோ-ஜியோவின் 
மூன்றாம் நாள் (23.02.18-வெள்ளி)
மறியல்
போராட்டத்திற்கு 
நாமக்கல்மாவட்டத்தின்சார்பிலும்,மாநில அமைப்பின்சார்பிலும்  மாநிலத்தலைமைநிலையச்செயலாளர் திரு.பெ.பழனிசாமி(நாமகிரிப்பேட்டை) அவர்கள் கூட்டுத்தலைமை ஏற்கிறார்.

எலச்சிப்பாளையம்,வெண்ணந்தூர்,நாமகிரிப்பேட்டை,கொல்லிமலை மற்றும் கபிலர்மலை ஆகிய ஒன்றியங்களிலிருந்து மன்றப்பொறுப்பாளர்கள் சென்னைக்கு படைஎடுத்துள்ளனர்.

ஆசிரியர்-அரசு ஊழியர்களின் பொதுக்கோரிக்கைகளுக்கு அரசாணை பெறும் பெரும்காரியத்திற்காக
சிறை புகும் நாமக்கல்மாவட்ட மன்றத்தின் தியாகசீலர்களை
நான்வணங்குகிறேன்;வாழ்த்துகிறேன்;பாராட்டுகிறேன்;
       மிகுநன்றி          நவில்கின்றேன்.
           ~முருகசெல்வராசன்.
                  🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

ஜாக்டோ~ஜியோ:- சென்னையில் தொடர் மறியல் போராட்டம்-இரண்டாம் நாள் (22-2-18) நிகழ்வுகள்...

வியாழன், 22 பிப்ரவரி, 2018

நாமக்கல் மாவட்டம்~ஆசிரியர் மன்றத்தின் இரண்டாம்நாள்(22-2-18) மறியல் போர் மறவர்கள் பொதுச்செயலாளர் பாவலர்அய்யா அவர்கள் உடன்...

ஜாக்டோ~ஜியோ:- சென்னையில் தொடர் மறியல் போராட்டம்-முதல் நாள் (21-2-18) நிகழ்வுகள்~நாளிதழ் செய்திகள்....

ஜாக்டோ~ஜியோ:- சென்னையில் தொடர் மறியல் போராட்டம்-முதல் நாள் (21-2-18) நிகழ்வுகள்...