வெள்ளி, 13 ஜூலை, 2018

பள்ளிக் கல்வி -பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது -2018 ஆம் ஆண்டிற்கான கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுருறுத்தல்-சார்பு...

பள்ளிக்கல்வி -திருவாரூர் மாவட்டம்-அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும்/ஆதி திராவிட/மெட்ரிக்/ சிபிஎஸ்இ பள்ளிகள் அரசு விடுமுறை நாட்களில் செயல்படுவது குறித்த அறிரைகள் வழங்குதல் - சார்பு...

சேலம் மற்றும் ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி) வீட்டுவாடகைப்படி சார்ந்த அறிவிக்கை...

மதிப்புமிகு. 
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின்  அரசிதழ் அறிவிக்கை  ஒருவாரத்தில் வெளியாகும் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டத்தின் 9 ஒன்றியங்களில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அரசூழியர்களுக்கும் சேலம் மற்றும் ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டுவாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை கோரி தொடர்ந்து தொண்டாற்றியது. இப்பணியில் இணைத்துக்கொண்டு பங்கேற்பும், பங்களிப்பும் அளித்துள்ள அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனம்நிறைந்த நன்றியை  உரித்தாக்கிக் கொள்கிறேன்.
           ~முருகசெல்வராசன்.

வியாழன், 12 ஜூலை, 2018

Whatsapp Group-ல் Admins மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி?


1. நீங்கள் அட்மினாக இருக்கும்  Group க்குள் நுழையுங்கள்.

2. அதில்  'Group info' என்பதை தெரிவு செய்யவும்.

3. பிறகு அதிலுள்ள 'Group settings' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

4. அதில் இரண்டாவதாக இருக்கும் 'Send messages' என்பதை தெரிவு செய்யவும்.

5. பிறகு அதிலுள்ள 'Only admins' என்பதை தெரிவு செய்யவும்.

இணையம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது ...

இணையம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது
இனி Balance இல்லாமலும் Call செய்யலாம்: BSNL அதிரடி!

இந்தியாவில் முதல் முறையாக, இணையம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது!

மொபைல் டேட்டா எனப்படும் இணைய டேட்டாவினை பயன்படுத்தி, BSNL மொபைல் எண்களின் மூலம் இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு மொபைல் எண்ணுக்கும் அழைப்புகளை ஏற்படுத்தும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது.

BSNL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான Wings என்னும் செயலியின் மூலம் இணைய வசதிகளை (Wifi, Mobile Data) கொண்டு பிற நெட்வொர்கள் எண்களுக்கு அழைப்புகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இணைய வசதியினை கொண்டு பிரத்தியேக செயலிகள் மூலம் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அந்த அழைப்புகளின் இருப்புறமும் குறிப்பிடப்பட்ட செயலி அவசியமாக கருதப்பட்டது, ஆனால் இந்த Wings செயலியின் மூலம் மொபைல் எண்ணில் மூலமே அழைப்புகளை ஏற்படுத்தலாம்.

இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசிய தொலைத் தொடர்பு அமைச்சர் மனோஜ் குமார் தெரிவிக்கையில்... இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள BSNL நிறுவனத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த Wings செயலியில் பதிவு செய்துக்கொள்ள இந்த வாரம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் எனவும், வரும் ஜூலை 25-ஆம் நாள் முதல் இந்த வசதி செயல்பாட்டுக்கு வரும் எனவும் BSNL நிறுவனம் அறிவித்துள்ளது!

மத்திய அரசு அலுவலகங்களின் 2019 ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு...

IT~File Before Due Date and Avoid Late Fee Upto ₹5OOO…

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு...

ஒன்றாம்வகுப்பு புதிய பாடநூல் சார்ந்த கருத்தாளர்களுக்கான பயிற்சியின் போது வழங்கப்பட்ட சில தகவல்கள்...


*புதிய கற்பித்தல் முறையில் 1-3 வகுப்புகளுக்கு Lesson plan எழுத தேவையில்லை.

*Work done register தேவையில்லை, விரும்பினால் ஆசிரியர் எழுதி பராமரிக்கலாம் .

*கம்பிப்பந்தல்,கீழ்மட்ட கரும்பலகை, காலநிலை அட்டவணை, ஆரோக்கிய சக்கரம், சுயவருகைப்பதிவேடு ஆகியன பயன்படுத்த வேண்டும்

*CCE RECORD உண்டு

*இந்த ஆண்டுமுதல் SKILLS ACHIEVEMENT RECORD or CHART என்ற ஒன்றை உருவாக்கி பயன்படுத்தவேண்டும்

*புதிய கற்பித்தலுக்கென எந்தவொரு குழு அட்டைகளும் பயன்படுத்த தேவையில்லை.

*நான்கு & ஐந்து வகுப்புகளுக்கு SALM முறையில் கற்பித்து Lesson plan எழுதவேண்டும்

*மற்ற பிற செய்திகள், பயிற்சிகள், நிகழ்வுகள் வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியில் BRT & கருத்தாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும்...

உலக நாடுகளும் ஆசிரியர்- மாணவர்களின் விகிதமும்...